மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் தடையை மீறி வெளியே சுற்றியதாக ஒரே நாளில் 1,100 பேர் மீது வழக்குப் பதிவு + "||" + 1100 persons charged for violating prohibition order in Tamil Nadu

தமிழகம் முழுவதும் தடையை மீறி வெளியே சுற்றியதாக ஒரே நாளில் 1,100 பேர் மீது வழக்குப் பதிவு

தமிழகம் முழுவதும் தடையை மீறி வெளியே சுற்றியதாக ஒரே நாளில் 1,100 பேர் மீது வழக்குப் பதிவு
தமிழகம் முழுவதும் தடையை மீறி வெளியே சுற்றியதாக ஒரே நாளில் 1,100 பேர் மீது வழக்குப் பதிவு
சென்னை,

இந்தியாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, இந்த அறிவிப்பை வெளியிட்டு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். 

 இதையடுத்து, நாடு முழுவதும் ஊரடங்கு தீவிரமாகக் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறி வெளியில் அவசியம் இன்றி சுற்றுவோரை போலீசார் எச்சரித்து அனுப்பி வருகின்றனர். சில இடங்களில் தேவையின்றி சுற்றிய இளைஞர்களுக்கு லத்தியடியும் கிடைத்தது.

இந்த நிலையில்,   தமிழகத்தில் தடை உத்தரவை மீறிய 1100 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 1,100 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.  தொற்று நோய் தடுப்பு மற்றும் பேரிடர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. வேலூர் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் உள்பட 199 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்தை நெருங்கியது
வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலக உதவியாளர்கள், ஜவுளிக்கடை ஊழியர்கள் உள்பட 199 பேர் ஒரேநாளில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் வேலூர் மாவட்டத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 6,955 ஆக உயர்ந்தது.
2. 2 வீரர்களுக்கு கொரோனா தொற்று: கடலோர காவல்படை கப்பலில் 80 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்
தூத்துக்குடியில் கடலோர காவல்படை வீரர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, 80 வீரர்கள் ரோந்து கப்பலில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
3. வாசுதேவநல்லூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மனோகரனுக்கு கொரோனா தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதி
வாசுதேவநல்லூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மனோகரன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால், தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
4. புதிதாக 250 பேருக்கு தொற்று உறுதி: நெல்லையில் கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை தாண்டியது
நெல்லையில் புதிதாக 250 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது. தூத்துக்குடியில் மேலும் 3 பேர் பலியானார்கள்.
5. நெல்லை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2,128 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் கலெக்டர் ஷில்பா தகவல்
நெல்லை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2,128 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார்.