மாநில செய்திகள்

கொரோனா அச்சம்: வாடும் மல்லிகைப்பூ; நாளொன்றுக்கு ரூ.1 கோடி இழப்பு + "||" + Corona Fear: Grilled Jasmine; Loss of Rs.1 crore per day

கொரோனா அச்சம்: வாடும் மல்லிகைப்பூ; நாளொன்றுக்கு ரூ.1 கோடி இழப்பு

கொரோனா அச்சம்:  வாடும் மல்லிகைப்பூ; நாளொன்றுக்கு ரூ.1 கோடி இழப்பு
கொரோனா வைரஸ் அச்சத்தினால் பறிக்க ஆளில்லாமல் மல்லிகைப்பூ செடியிலேயே விடப்பட்டு உள்ளதுடன் நாளொன்றுக்கு ரூ.1 கோடி வர்த்தக பாதிப்பும் ஏற்படுகிறது.
ஈரோடு,

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 649 ஆக உயர்ந்துள்ளது.  தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.  நேற்றுவரை 23 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு இருந்தது.  ஒருவர் உயிரிழந்து உள்ளார்.

இந்நிலையில், கன்னியாகுமரி, கோடிமுனை பகுதியை சேர்ந்த நபர் (வயது 40) ஒருவர் உயிரிழந்த நிலையில், தமிழகத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 2 ஆக உயர்ந்து உள்ளது.

ஊரடங்கு உத்தரவு மற்றும் கொரோனா வைரஸ் அச்சத்தினால் ஈரோட்டின் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதியில், மல்லிகை பூக்கள் பறிக்கப்படாமல் செடியிலேயே விடப்பட்ட நிலையில் உள்ளது.  இதனால் நாளொன்றுக்கு 25 டன் பூக்கள் வீணாகி வருவதுடன்,  ரூ.1 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது என பூ சாகுபடி விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா அச்சம் எதிரொலி: முக கவசம் அணிந்து எளிமையாக நடந்த திருமணங்கள்
கொரோனா அச்சம் எதிரொலியாக ராமநாதபுரத்தில் திருமணங்கள் எளிமையாக நடந்தன. இதில் குடும்பத்தினர் மட்டும் கலந்து கொண்டனர்.
2. கொரோனா அச்சம்; 34 ஆயிரம் மாணவ மாணவியர் 12ம் வகுப்பு தேர்வை எழுதவில்லை
கொரோனா வைரஸ் தொற்று அச்சத்தினால் 34 ஆயிரம் மாணவ மாணவியர் 12ம் வகுப்பு பொது தேர்வை எழுதவில்லை.
3. கொரோனா அச்சம் : தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்ட மத்திய அமைச்சர்
கொரோனா அச்சம் காரணமாக வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டார்.
4. கொரோனா அச்சம்: இந்திய ஒலிம்பிக் சங்க குழுவின் டோக்கியோ பயணம் தள்ளிவைப்பு
கொரோனா அச்சம் காரணமாக இந்திய ஒலிம்பிக் சங்க குழுவினர் டோக்கியோ பயணம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
5. கொரோனா அச்சம்: கைகுலுக்க வேண்டாம்; ‘நமஸ்தே’ சொல்லுங்கள் போதும் - இஸ்ரேல் பிரதமர் அறிவுரை
கொரோனா அச்சம் காரணமாக, கைகுலுக்க வேண்டாம், ‘நமஸ்தே’ சொல்லுங்கள் போதும் என்று இஸ்ரேல் பிரதமர் கூறியுள்ளார்.