மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14 வரை நீட்டிப்பு; முதல் அமைச்சர் ஆலோசனை கூட்டத்தில் முடிவு + "||" + Curfew extended in Tamil Nadu till April 14; The decision in CM advisory meeting

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14 வரை நீட்டிப்பு; முதல் அமைச்சர் ஆலோசனை கூட்டத்தில் முடிவு

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14 வரை நீட்டிப்பு; முதல் அமைச்சர் ஆலோசனை கூட்டத்தில் முடிவு
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை வருகிற ஏப்ரல் 14ந்தேதி வரை நீட்டிக்க முதல் அமைச்சர் பழனிசாமி தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
சென்னை,

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  இந்த உத்தரவு மார்ச் 31ந்தேதி வரை இருக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.  இதன்பின்னர் கடந்த 24ந்தேதி நாட்டு மக்களுக்கு 8 மணியளவில் உரையாற்றிய பிரதமர் மோடி, கொரோனா முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கையாக அன்று நள்ளிரவு முதல் நாடு முழுவதும் தொடர்ந்து 21 நாட்கள் முடக்கப்படுகிறது என அறிவிப்பு வெளியிட்டார்.  144 தடை உத்தரவு தமிழகத்தில் மார்ச் 31ந்தேதி வரை இருக்கும் என முன்பே அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடந்தது.  இதில் பல்வேறு துறை சார்ந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தின் முடிவில், தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை வருகிற ஏப்ரல் 14ந்தேதி வரை நீட்டிப்பது என முடிவாகியுள்ளது.

இதேபோன்று, வீடுகளுக்கு உணவு சப்ளை செய்யும் நிறுவனங்களுக்கு தொடர் தடை விதிக்கப்பட்டு உள்ளது.  பொதுமக்களுக்கு தடையின்றி பொருட்கள் கிடைக்க மூத்த அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.  அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

கிராமம், நகரங்களில் தனியார் வங்கிகள், சிறிய நிதி நிறுவனங்கள் பண வசூலை நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

உணவகங்கள் , மளிகை கடைகள் நாள் முழுவதும் இயங்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.  அவற்றுக்கு நேர வரம்பு எதுவும் குறைக்கப்படவில்லை என தமிழக அரசு விளக்கம் அளித்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஊரடங்கு உத்தரவால் அறுவடை செய்யாமல் காய்ந்து கிடக்கும் தர்பூசணிகள்
ஊரடங்கு உத்தரவால் நத்தக்காடையூர் பகுதி வயல்களில் அறுவடை செய்யப்படாமல் தர்பூசணி பழங்கள் காய்ந்து கிடக்கின்றன.
2. ஊரடங்கிற்கு பிந்தைய திட்டம் என்ன? விஞ்ஞானிகள்-மருத்துவர்கள் அடங்கிய 800 பேர் மத்திய அரசிற்கு கேள்வி
ஊரடங்கிற்கு பிந்தைய திட்டம் என்ன என விஞ்ஞானிகள்-மருத்துவர்கள் அடங்கிய 800 பேர் மத்திய அரசிற்கு கேள்வி விடுத்து உள்ளனர்.
3. ஊரடங்கு உத்தரவை மீறி சுற்றித்திரிந்தவர்கள் மீது வழக்கு
ஊரடங்கு உத்தரவை மீறி சுற்றித்திரிந்தவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
4. ஊரடங்கு உத்தரவை மீறியதாக ஒரேநாளில் 684 பேர் கைது: தேவையின்றி சுற்றிய இளைஞர்களை தோப்புக்கரணம் போட வைத்த போலீசார் - உறுதிமொழியும் ஏற்க வைத்தனர்
கோவை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சென்றதாக ஒரே நாளில் 684 பேர் கைது செய்யப்பட்டனர். அதேபோல் சாலையில் தேவையின்றி சுற்றித்திரிந்த இளைஞர்களை போலீசார் தோப்புக்கரணம் போட வைத்தனர்.
5. ஏப்ரல் 14-ந்தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பதை மத்திய அரசு தான் முடிவு செய்யும்- முதல்வர் பழனிசாமி
ஏப்ரல் 14-ந்தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பதை மத்திய அரசு தான் முடிவு செய்யும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.