தேசிய செய்திகள்

ஊரடங்கை மீறி கூட்டம் கூட்டிய பெண் சாமியார்; வாள் கொண்டு மிரட்டினார்; தடியடி நடத்திய போலீசார் + "||" + Covid-19 lockdown: UP godwoman brandishes sword dares police to stop religious event arrested

ஊரடங்கை மீறி கூட்டம் கூட்டிய பெண் சாமியார்; வாள் கொண்டு மிரட்டினார்; தடியடி நடத்திய போலீசார்

ஊரடங்கை மீறி கூட்டம் கூட்டிய பெண் சாமியார்; வாள் கொண்டு மிரட்டினார்; தடியடி நடத்திய போலீசார்
ஊரடங்கை மீறி கூட்டத்தை கூட்டிய பெண் சாமியாரை போலீசார் தடியடி நடத்தி விரட்டி அடித்தனர்.
லக்னோ

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்திய பிரதமர் மோடி மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்க நாடு முழுவதும் 21 நாட்கள் ஜனதா ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன்படி மக்கள் ஒன்று கூடவோ வெளியில் சுற்றவோ தடை நீடித்து வருகிறது.

தடையை மீறி வெளியே சுற்றி திரிபவர்களை போலீசார் தடி கொண்டு அடித்தும்,மிரட்டியும் அனுப்பி வருகின்றனர் 

இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் லக்னோவிலிருந்து கிட்டத்தட்ட 300 கி.மீ தூரத்தில் உள்ள தியோரியாவில் உள்ள மெஹ்தா பூர்வா பகுதியில் ஒரு பெண் சாமியார் தனது வீட்டில் மத நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளார்.
அதில், 100க்கும் மேற்பட்டோர் கலந்த கொண்டுள்ளனர். சாமியாரின் வீட்டிலேயே நடந்த கூட்டத்தை கலைக்கும்மாறு போலீசார் வந்து அறிவுரை கூறியுள்ளனர். ஆனால், அந்த சாமியார் கேட்கவில்லை

தொடர்ந்து போலீசார் அங்கு கூடியவர்களிடம் கலைந்து செல்ல அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், ஆவேசத்தில்  பெண் சாமியார் வாள் எடுத்து சுழற்றி போலீசாரை மிரட்டி உள்ளார். இதனால், பொறுமை இழந்த போலீசார் அந்த பெண் சாமியாரை அடித்து விரட்டி உள்ளனர்.

மேலும், அங்கு கூடியிருந்த அந்த சாமியாரின் பக்தர்களையும் தடியடி நடத்தி விரட்டி உள்ளனர். இதனால், அவர்கள் அங்கிருந்து தலைதெறிக்க ஓடியுள்ளனர். போலீசார் பெண் போலீசாரையும் அங்கு குடியிருந்த சிலரையும்  கைது செய்து உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. இன்று வரை 80 ஆயிரம் பேருக்கு கொரோனா சோதனை; மராட்டியம் - தென்மாநில புள்ளி விவரங்கள்
இன்று வரை 80 ஆயிரம் பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டு உள்ளது. மராட்டியம் மற்றும் தென்மாநில புள்ளி விவரங்கள் வருமாறு:
2. பிரதமர் கூறியபடி மெழுகுவர்த்தி ஏற்றினால் வெப்பத்தில் கொரோனா செத்துவிடும் - பா. ஜனதா எம்.எல்.ஏ விளக்கம்
பிரதமர் கூறியபடி மெழுகுவர்த்தி ஏற்றினால் வெப்பத்தில் கொரோனா செத்துவிடும் என பா.ஜனதா எம்.எல்.ஏ அதிரடி விளக்கம் கொடுத்துள்ளார்.
3. டெல்லி மாநாட்டில் பங்கேற்றதை மறைத்து மலேசியா செல்ல முயன்ற 8 பேர் விமான நிலையத்தில் சிக்கினர்
தப்லீக் ஜமாத் கூட்டத்தில் கலந்து கொண்ட 8 மலேசியர்கள், டெல்லியில் இருந்து மீட்பு விமானத்தில் பறக்க முயற்சித்தப்போது பிடிப்படத்தாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
4. ஊரடங்கு காரணமாக உலகம் முழுவதும் சுமார் 40,000 இந்திய கடற்படையினர் சிக்கித் தவிப்பு
ஊரடங்கு காரணமாக உலகம் முழுவதும் சுமார் 40,000 இந்திய கடற்படையினர் சிக்கித் தவிக்கின்றனர் என கடல்சார் அமைப்புகள் தெரிவித்து உள்ளன.
5. கொரோனா நோயால் பாதிக்கப்பட்டால் சிகிச்சைக்கு எவ்வளவு செலவாகும்?
கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட சராசரி மனிதனுக்கு சிகிச்சைக்கு எவ்வளவு செலவாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.