மாநில செய்திகள்

கொரோனா கண்காணிப்பு முகாமில் இருந்து தப்பி காதலியை பார்க்க சென்ற வாலிபர் பிடிபட்டார் + "||" + Fleeing from Corona Observation Campyoung man who went to see the girlfriend was caught

கொரோனா கண்காணிப்பு முகாமில் இருந்து தப்பி காதலியை பார்க்க சென்ற வாலிபர் பிடிபட்டார்

கொரோனா கண்காணிப்பு முகாமில் இருந்து தப்பி காதலியை பார்க்க சென்ற வாலிபர் பிடிபட்டார்
மதுரை கொரோனா கண்காணிப்பு முகாமில் இருந்து தப்பிய வாலிபரை அவரது காதலி வீட்டில் போலீசார் பிடித்துள்ளனர்.
மதுரை

துபாயில் இருந்து மும்பை வந்து விமானம் மூலம் கடந்த 21ஆம் தேதி மதுரை வந்த சிவகங்கை மாவட்டம் கீழபூங்குடியைச் சேர்ந்த வாலிபர் மதுரை சின்ன உடைப்பு கொரோனா கண்காணிப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார். முகாமில் சிகிச்சையில் இருந்த அவர் இன்று அதிகாலை தப்பி ஓடியதாக அவனியாபுரம் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

முகாமில் இருந்து தப்போடிய அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் வெளிநாட்டிலிருந்து வந்த அவரை பார்க்க காதலி ஆவலாக இருந்ததால், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அவரை காண சினிமா பாணியில் முகாமிலிருந்து தப்பியோடியது தெரியவந்தது.

சிவகங்கையில் காதலி வீட்டில் இருந்தவரை சுற்றிவளைத்த தனிப்படையினர் கைது செய்து தற்பொழுது மதுரை கொண்டு வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் கொரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 12 பேர் உயிரிழப்பு
இந்தியாவில் கொரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 12 பேர் உயிரிழந்து உள்ளனர்.
2. கொரோனா தொற்று ஜாதி, மத, பேதமின்றி பரவக்கூடியது; அதற்கு மதச்சாயம் பூசுவதை தவிர்க்க வேண்டும் -முதல்வர் பழனிசாமி
கொரோனா தொற்று ஜாதி, மத, பேதமின்றி அனைவருக்கும் பரவக்கூடியது; அதற்கு மதச்சாயம் பூசுவதை தவிர்க்க வேண்டும் என தமிழக முதல்வர் பழனிசாமி கூறி உள்ளார்.
3. மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு 537 ஆக உயர்வு; தாராவியில் பரவினால் கட்டுபடுத்த முடியாது எச்சரிக்கை
மராட்டிய மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 537 ஆக உயர்ந்துள்ளது. தாராவியில் நோய்த்தொற்று வேகமாக பரவினால் நிலைமையை நிர்வகிக்க முடியாது என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
4. கொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் ஒரு குட்டி ஜோதிடரின் கணிப்பு
கொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் ஒரு குட்டி ஜோதிடர் அபிக்யா ஆனந்த் என்பவர் கணித்து உள்ளார்.
5. இந்தியாவில் கொரோனா வைரஸ் 30 சதவீத மாவட்டங்களுக்கு பரவி உள்ளது
இந்தியாவில் கொரோனா வைரஸ் 30 சதவீத மாவட்டங்களுக்கு பரவி உள்ளது.இதை கட்டுப்பாடுத்துவது அதிகாரிகளுக்கு சவாலாக இருக்கும் .