தேசிய செய்திகள்

கேரளாவில் 9 பேருக்கு கொரோனா; பாதிப்பு எண்ணிக்கை 118 ஆக உயர்வு + "||" + Corona for 9 in Kerala; The number of casualties increased to 118

கேரளாவில் 9 பேருக்கு கொரோனா; பாதிப்பு எண்ணிக்கை 118 ஆக உயர்வு

கேரளாவில் 9 பேருக்கு கொரோனா; பாதிப்பு எண்ணிக்கை 118 ஆக உயர்வு
கேரளாவில் கூடுதலாக 9 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்து உள்ளார்.
திருவனந்தபுரம்,

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அமல்படுத்தப்பட்டு உள்ளது.  இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, கேரளாவில் கூடுதலாக 9 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதன்படி, கேரளாவில் பாலக்காட்டை சேர்ந்த 2 பேர், எர்ணாகுளத்தை சேர்ந்த 3 பேர், பத்தனம்திட்டாவை சேர்ந்த 2 பேர்,  இடுக்கி மற்றும் கோழிக்கோட்டை சேர்ந்த தலா ஒருவருக்கு என 9 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

அவர்கள் இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து கேரளா வந்தவர்கள் என்று அவர் கூறினார்.  இதன் மூலம் கேரளாவில் கொரோனா வைரசால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 118 ஆக உயர்ந்துள்ளது.  அவர்களில் 6 பேர் குணமடைந்துள்ளனர் என்றும், 112 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  இதேபோன்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 29 ஆக உயர்ந்து உள்ளது என தமிழக சுகாதார துறை அறிவித்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் ஏப்ரல் 2 முதல் ரேஷன் கார்டுக்கு தலா ரூ.1,000 வழங்கப்படும்
கொரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கு உத்தரவு அமல் ஆகியவற்றால் தமிழகத்தில் ஏப்ரல் 2 முதல் ரேஷன் கார்டுக்கு தலா ரூ.1,000 வழங்கப்படுகிறது.
2. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 27 ஆக உயர்வு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.
3. கொரோனா பாதிப்பு; உலகம் முழுவதும் பலி எண்ணிக்கை 22,025 ஆக உயர்வு
கொரோனாவால் உலகம் முழுவதும் பலி எண்ணிக்கை 22 ஆயிரத்து 25 ஆக உயர்ந்து உள்ளது.
4. ஸ்பெயினில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 3,647 ஆக உயர்வு
ஸ்பெயினில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 3 ஆயிரத்து 647 ஆக உயர்ந்து உள்ளது.
5. இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 649 ஆக உயர்வு
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 649 ஆக உயர்ந்துள்ளது.