மாநில செய்திகள்

தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு - மொத்த எண்ணிக்கை 29 ஆக உயர்வு + "||" + Coronation affects 3 more people in Tamil Nadu - Total increase to 29

தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு - மொத்த எண்ணிக்கை 29 ஆக உயர்வு

தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு - மொத்த எண்ணிக்கை 29 ஆக உயர்வு
தமிழகத்தில் நேற்று மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை, 

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் தமிழகத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 ஆக இருந்தது.

இந்த நிலையில் நேற்று தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதில், துபாயில் இருந்து தமிழகம் வந்த 24 வயது வாலிபர் திருச்சி கே.எ.பி.விஸ்வநாதம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், லண்டனில் இருந்து வந்த 24 வயது வாலிபர், அவருடன் இருந்த 65 வயது பெண் ஒருவர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழக விமான நிலையங்களில் இதுவரை 2 லட்சத்து 9 ஆயிரத்து 284 பேருக்கு முதற்கட்ட பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 15 ஆயிரத்து 788 பேர் வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 86 ஆயிரத்து 644 பேரின் தகவல்கள் குடியுரிமை ஆணையத்திடம் இருந்து பெறப்பட்டு அவர்களுக்கும் கொரோனா பாதிப்பு இருக்கிறதா? என சோதனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நாடுகளில் இருந்து தமிழகம் வந்த 109 பேர் விமான நிலையங்கள் அருகே கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் 962 பேருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 933 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது. 77 பேரின் ரத்த பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை. 29 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு மருத்துவமனையில் 284 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் தடையை மீறிய 17 ஆயிரம் பேர் கைது
தமிழகத்தில் தடையை மீறிய 17 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
2. இந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரிப்பு
இந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது.
3. உலக அளவில் கொரோனா பாதிப்பு; பலி எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்ததால் சோகம்
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கோர தாண்டவம் ஆடி வருகிறது.
4. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்வு
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
5. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 748 ஆக உயர்வு
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 748 ஆக உயர்ந்துள்ளது.