மாநில செய்திகள்

அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்கக் கூடாது - தமிழக அரசு உத்தரவு + "||" + Essential goods Should not prevent the passing of Government order of Tamil Nadu

அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்கக் கூடாது - தமிழக அரசு உத்தரவு

அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்கக் கூடாது - தமிழக அரசு உத்தரவு
அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்கக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை, 

தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை வெளியிட்டுள்ள அரசாணையில், ‘மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்குதான் ஊரடங்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறதே தவிர அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்வதை தடுப்பதற்கு அல்ல’ என்பதை இந்த உத்தரவை அமல்படுத்தும் அதிகாரிகள் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மாநிலத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது, பேரிடர் மேலாண்மை சட்டம், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைப்போல வேளாண் துறை முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ‘தோட்டக்கலைத் துறையின் கீழ் வரும் பண்ணைகள், பூங்காக்களில் தண்ணீர் ஊற்றும் பணியாளர்களை சுழற்சி முறையில் பணியமர்த்தி பராமரிக்க வேண்டும். வேளாண் உற்பத்திப் பொருட்களை மொத்த விற்பனை சந்தைகள், உழவர் மையங்களுக்கு விவசாயிகள் கொண்டு செல்ல எந்த தடையும் விதிக்கப்படவில்லை. மொத்த விற்பனை சந்தையில் வேளாண் பொருட்களை விற்கும் வியாபாரிகளுக்கும் தடை உத்தரவு பொருந்தாது’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

வேளாண்மை சந்தைக் குழு, சந்தைகளில் உள்ள உணவகம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சோப்பு உள்ளிட்ட சுத்திகரிப்பு வசதிகளை செய்திருக்க வேண்டும் எனக்கூறியுள்ள ககன்தீப்சிங் பேடி, உழவர் சந்தைகளில் ஒருவருக்கொருவர் ஒரு மீட்டருக்கும் மேல் இடைவெளி விட்டு நிற்க வேண்டும் எனவும், அனைத்து உரக்கடைகளும் திறந்திருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்: அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக்கு தடையில்லை - கலெக்டர் வினய் பேட்டி
144 தடை உத்தரவு காரணமாக பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். அனைத்து அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக்கும் தடையில்லை என்று கலெக்டர் வினய் கூறினார். இது குறித்து அவர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
2. அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் பாரதீய ஜனதா வலியுறுத்தல்
புதுவை மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சி வலியுறுத்தி உள்ளது.
3. அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு: பிரதமர் மோடி அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் காங்கிரஸ் கோரிக்கை
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக விவாதிக்க பிரதமர் மோடி அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.