உலக செய்திகள்

கொரோனா பாதிப்பு; உலகளவில் அமெரிக்கா முதலிடம் + "||" + US surpasses China for highest number of confirmed Covid-19 cases in the world

கொரோனா பாதிப்பு; உலகளவில் அமெரிக்கா முதலிடம்

கொரோனா பாதிப்பு;  உலகளவில் அமெரிக்கா முதலிடம்
கொரோனா வைரசின் பிறப்பிடமான சீனாவை விட, அமெரிக்காவில் அந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
வாஷிங்டன்,

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.  உலகம் முழுவதும் இதுவரை 5 லட்சத்து 29 ஆயிரத்து 614 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. இவர்களில் இதுவரை 23 ஆயிரத்து 976 பேர் உயிரிழந்துள்ளனர்.  மேலும், 3 லட்சத்து 82 ஆயிரத்து 258 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 976 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் சீனா, ஐரோப்பிய நாடுகளை தொடர்ந்து தற்போது அமெரிக்காவில் நிலை கொண்டுள்ளது. அந்நாட்டில் வைரஸ் பயங்கர வேகத்தில் பரவி வருகிறது.  இந்நிலையில், அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 85 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

மேலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 260-க்கும் மேற்பட்டோர் பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அமெரிக்காவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்து 1295-ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையில், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் முண்ணனியில் இருந்த சீனா, இத்தாலியை பின்னுக்கு தள்ளி அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது. 


தொடர்புடைய செய்திகள்

1. உலக நாடுகளில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 32,139 ஆக உயர்வு
உலக நாடுகளில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 32,139 ஆக உயர்ந்து உள்ளது.
2. தமிழகத்தில் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு; சுகாதார துறை செயலாளர் அறிவிப்பு
தமிழகத்தில் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷ் அறிவித்து உள்ளார்.
3. சீனாவுக்கு அடுத்த தலைவலி ஹூபே மாகாணத்தில் வெடிக்கும் கலவரம்
ஹூபே மாகாணத்தில் இருந்து மக்கள் வெளியேற முயற்சிப்பதால் ஆங்காங்கே வன்முறை வெடித்துள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
4. அமெரிக்காவை மிரட்டும் கொரோனா; நியூயார்க நகரை தனிமைபடுத்த தேவையில்லை- டொனால்டு டிரம்ப்
அமெரிக்காவை மிரட்டும் கொரோனா தொற்று; நியூயார்க நகரை சீனா உகான் நகரைப்போல் தனிமை படுத்த டிரம்ப் அதிரடி திட்டத்தில் இருந்து பின்வாங்கினார்.
5. தமிழகத்தில் 42 பேருக்கு கொரோனா பாதிப்பு; நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு என்ன?
தமிழகத்தில் 42 கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது 39 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருவர் குணமாகியுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.