உலக செய்திகள்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்; சீன அதிபருடன் டிரம்ப் இன்று ஆலோசனை + "||" + Donald Trump To Discuss Coronavirus With China's Xi Jinping Today

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்; சீன அதிபருடன் டிரம்ப் இன்று ஆலோசனை

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்; சீன அதிபருடன் டிரம்ப் இன்று ஆலோசனை
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தொடர்பாக ஜி ஜின்பிங்குடன் டிரம்ப் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
வாஷிங்டன்,

சீனாவின் உகான் நகரை பிறப்பிடமாக கொண்ட கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகளை உலுக்கி வருகிறது. இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளை ஆட்டம் காண வைத்த கொரோனா வைரஸ், தற்போது அமெரிக்காவை மிரட்டி வருகிறது. உலகளவில் கொரோனா வைரசால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் சீனாவை பின்னுக்கு தள்ளி அமெரிக்கா முதலிடம் பெற்றுள்ளது. 

இந்த நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் இன்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்  ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா விவகாரம் தொடர்பாக  இரு தலைவர்களும் ஆலோசனை நடத்துவார்கள் என்று கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் விவகாரத்தில், சீனாவை டிரம்ப் தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், ஜி ஜின்பிங்குடன் ஆலோசனை நடத்த உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. நோயாளி குணம் அடைந்தாலும் கொரோனா வைரசை பரப்பும் காலம் தொடரலாம்-புதிய புத்தகத்தில் பரபரப்பு தகவல்
நோயாளி குணம் அடைந்த பின்னரும் கூட கொரோனா வைரசை பரப்பும் காலம் தொடரக்கூடும் என்று புதிய புத்தகம் ஒன்று கூறுகிறது.
2. பியர்ல் ஹார்பர்-இரட்டை கோபுரம் தாக்குதலை விட வேதனையை இந்த வாரம் சந்திக்க வேண்டும் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை
பியர்ல் ஹார்பர் தாக்குதல்,இரட்டை கோபுரம் தாக்குதலை விட வேதனை தரும் சூழ்நிலையை கொரோனாவால் இந்த வாரம் அமெரிக்கா சந்திக்க நேரிடும் என மருத்துவ நிபுணர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
3. உயிரியல் பூங்காக்களில் உள்ள விலங்குகளை கண்காணிக்க உயிரியல் பூங்கா ஆணையம் உத்தரவு
விலங்குகளை கண்காணிக்குமாறு நாடு முழுவதும் உள்ள உயிரியல் பூங்காக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
4. அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் 1,200 பேர் கொரோனா வைரசால் உயிரிழப்பு
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,200 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
5. எதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி பேசியது வரவேற்கத்தக்கது- ப.சிதம்பரம் டுவிட்
எதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி பேசியது வரவேற்கத்தக்கது என்று ப.சிதம்பரம் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.