மாநில செய்திகள்

நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை மடக்கி பிடித்து எச்சரித்து அனுப்பிய போலீசார் + "||" + Nagai Youngsters Caught by Police

நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை மடக்கி பிடித்து எச்சரித்து அனுப்பிய போலீசார்

நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை மடக்கி பிடித்து எச்சரித்து அனுப்பிய போலீசார்
நள்ளிரவில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களை போலீசார் மடக்கி பிடித்து எச்சரித்து அனுப்பினர்.
நாகை,

கொரோனா வைரஸ் பரவலைக்  கட்டுப்படுத்தும் வகையில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வரும் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது.  எனினும், இந்த தடை உத்தரவை மீறி பல்வேறு இடங்களில், இளைஞர்கள் இரு சக்கர வாகனங்களில் சுற்றி வருவதை தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் காண முடிகிறது.  

அந்த வகையில், 144 தடை உத்தரவை மீறி நாகையில் நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் சென்ற பலரை போலீசார் மடக்கி எச்சரித்து அனுப்பினர். சில இளைஞர்களை தோப்புகரணம் போட சொல்லி தண்டனை அளித்தனர். பலருக்கு அபராதம் விதித்த போலீசார் கொரோனா வைரஸ் பாதிப்பை எடுத்துக் கூறி, யாரும் வெளியே செல்ல கூடாது என்று அறிவுறுத்தினர். பின்னர் வாகன சாவிகள் அளிக்கப்பட்டதும் அனைவரும் இருசக்கர வாகனங்களை எடுத்து  வேகமாக புறப்பட்டு சென்றனர். 

தொடர்புடைய செய்திகள்

1. உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்கவே கடுமையான கட்டுப்பாடுகள் : பிரதமர் மோடி
உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்கவே கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
2. ஊரடங்கு உத்தரவுக்கு நான் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்: பிரதமர் மோடி
ஊரடங்கு உத்தரவு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
3. இந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரிப்பு
இந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது.
4. புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவுங்கள்; ராகுல் காந்தி வேண்டுகோள்
ஊரடங்கு உத்தரவால் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவிக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவுங்கள் என்று ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
5. ஊரடங்கு உத்தரவால் சொந்த ஊருக்கு நடந்தே செல்லும் வெளி மாநில தொழிலாளர்கள்!
ஊரடங்கு உத்தரவு காரணமாக வெளி மாநிலத்தவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு நடந்தே செல்கின்றனர்.