உலக செய்திகள்

சீனாவில் பெண்ணிடம் தோன்றிய கொரோனா வைரஸ் ஏன் ஆண்களை விரும்பி தாக்குகிறது? + "||" + Coronavirus originated in ChinaWhy do men want to attack?

சீனாவில் பெண்ணிடம் தோன்றிய கொரோனா வைரஸ் ஏன் ஆண்களை விரும்பி தாக்குகிறது?

சீனாவில் பெண்ணிடம் தோன்றிய கொரோனா வைரஸ் ஏன் ஆண்களை விரும்பி தாக்குகிறது?
சீனாவில் பெண்ணிடம் தோன்றிய கொரோனா வைரஸ் ஆண்களை விரும்பி தாக்குகிறது என ஆய்வில் தெரியவந்து உள்ளது.
உகான் 

சீனா உகான் மாமிச உணவு சந்தையில் இறால் விற்கும் பெண்மணி ஒருவரே உலகின் முதல் கொரோனா நோயாளி என கண்டறியப்பட்டுள்ளது. வவீஹூய்சியான் என்ற 57 வயதான பெண்மணியே கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 

இலக்கான முதல் நபர் ஆவார். உகான் சந்தையில் இறால் விற்கும் இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 10 ஆம் தேதி காய்ச்சலால் அவதிப்பட்டுள்ளார்.ஆனால் பொதுவாக தனக்கு அடிக்கடி வரும் காய்ச்சல் என்றே இதையும் கருதியுள்ளார். இதனையடுத்து உள்ளூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சென்று இருமல் மற்றும் காய்ச்சலுக்கான சிகிச்சை எடுத்துக் கொண்டுள்ளார். தொடர்ந்து இறால் விற்பனையிலும் ஈடுபட்டுள்ளார். 

இவரே உகான் முழுவதும் பின்னர் உலகம் முழுவதும் பல ஆயிரம் பேர் சாவுக்கு காரணம் என கூறப்படுகிறது.அந்த காய்ச்சலுக்கு பின்னர் தமக்கு கடுமையான உடல் சோர்வு இருந்ததாகவும், ஆனால் கடந்த ஆண்டு ஏற்பட்ட காய்ச்சலின் போது இருந்த அளவுக்கு இல்லை எனவும்தெரிவித்துள்ளார். ஒவ்வொரு குளிர்காலத்திலும், நான் எப்போதும் காய்ச்சலால் பாதிக்கப்படுகிறேன். எனவே இதுவும் சாதாரண காய்ச்சல் என்று கருதியதாக  
தெரிவித்துள்ளார்.

உள்ளூர் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்றாலும், அவருக்கு குணமாகவில்லை என்றும், தொடர்ந்து டிசம்பர் 16 ஆம் தேதி உகான் நகர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.இவரை பரிசோதித்த அங்குள்ள மருத்துவர், 
இவருக்கு ஏற்பட்டுள்ள நோய் மிகவும் ஆபத்தானது எனவும், உகான் மாமிச சந்தையில் இருந்து இதே அறிகுறிகளுடன் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து டிசம்பர் இறுதியில் உகான் நகர மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் வீ அனுமதிக்கப்பட்டார்.ஜனவரியில் பூரண குணமடைந்த வீ, தாம் பாதிக்கப்பட்டது கொரோனா வைரஸ் எனவும், 

உகான் சந்தையில் அமைந்துள்ள பொது கழிவறையில் இருந்து பரவி இருக்கலாம் எனவும் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து உகான் நகராட்சி சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட முதல் 27 நோயாளிகளில் 24 பேர் உகான் சந்தையில் தொடர்புடையவர்கள் என சுட்டிக்காட்டியது. வீ மட்டுமின்றி அவரது மகள் உள்ளிட்ட குடும்பத்தினர்களும் இந்த விசித்திர காய்ச்சலுக்கு இலக்கானார்கள். சீன அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டிருந்தால், இந்த காய்ச்சல் சீனாவுடன் கட்டுக்குள் வந்திருக்கும் எனவும், உலக அளவில் பரவ வாய்ப்பில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் சீன தனியார் மருத்துவ ஆய்வறிக்கை ஒன்று வெளியிட்ட தகவலில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இலக்கான நபர் தொடர்பில் டிசம்பர் 1 ஆம் தேதியே அடையாளம் காணப்பட்டதாகவும், ஆனால் அவருக்கு உகான் சந்தையுடன் எந்த தொடர்பும் இல்லை என்ற ஒரு வாதத்தையும் முன்வைத்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக அதிகமாக ஆண்களே பாதிக்கப்படுவதாக புதிய சர்வதேச அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இத்தாலியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அந்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றியவர்களில் 60 வீதமானவர்கள் ஆண்கள் என்பதுடன், இறந்தவர்களில் 70 வீதமானவர்களும் ஆண்கள் என தெரியவந்துள்ளது.

பெண்களை விட ஆண்கள் மதுபானம் அருந்துவது, புகைப்பிடிப்பது போன்ற பழக்கங்கள் இதற்கு காரணம் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.அதேவேளை கொரோனா பாதிப்பு உள்ளான அமெரிக்கர்கள் அதனை மறைப்பதாக அமெரிக்காவின் சி.என்.என் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.இதனால், காணப்படும் நிலைமை குறித்து உலகளாவிய ரீதியாக புரிந்துக்கொள்ள முடியாமல் இருப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பல உலக நாடுகள் கொரோனா வைரஸ் காரணமாக அறை குறையாகவும் முழுமையாகவும் முடக்கப்பட்டுள்ள நிலையிலும் இவை அனைத்துக்கு சவால் விடுத்து கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி 
வருகிறது.

இந்த வைரஸை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இன்னும் குறிப்பிடத்தக்க காலம் செல்லும் எனவும் மக்கள் முடிந்தவரை ஒருவருக்கு ஒருவர் இடையிலான இடைவெளிகளை பேண வேண்டியது முக்கியமானது என சுகாதார அதிகாரிகள் மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தந்தையை 1200 கிலோமீட்டர் சைக்கிளில் அழைத்து வந்த மகளை பாராட்டிய இவான்கா டிரம்ப்
காயமுற்ற தந்தையை 1200 கிலோமீட்டர் சைக்கிளில் அழைத்து வந்த மகளை அழகிய சாதனை என இவான்கா டிரம்ப் பாராட்டி உள்ளார்
2. உத்திரபிரதேசத்துக்கு பதிலாக ஒடிசாவுக்குச் சென்ற புலம் பெயர்ந்த தொழிலாளர்கள சிறப்பு ரெயில்
உத்திரபிரதேசத்துக்கு பதிலாக ஒடிசாவுக்குச் சென்ற புலம் பெயர்ந்த தொழிலாளர்கள சிறப்பு ரெயில். பரிதவிக்கும் தொழிலாளர்கள்.
3. புதுச்சேரியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கிறது.
4. உலகளாவிய நோய்த்தடுப்பு முறைக்கு இடையூறு கொரோனா தடுப்பூசிகளை தாமதப்படுத்தலாம்
உலகளாவிய நோய்த்தடுப்பு முறைக்கு ஏற்பட்டுள்ள இடையூறு கொரோனா தடுப்பூசிகளை தாமதப்படுத்தலாம் என கூறப்படுகிறது.
5. இந்தியாவில் ஒரே நாளில் 1.15 லட்சம் கொரோனா பரிசோதனைகள்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் சோதிக்கப்பட்ட கொரோனா மாதிரிகளின் எண்ணிக்கை 1,15,364 ஆகும்.