உலக செய்திகள்

சீனா கிருமிகள் அடங்கிய ஆயுத கிடங்கை வைத்துள்ளது அதில் இருந்தே கொரோனா பரவியது- நியூயார்க் போஸ்ட் + "||" + China has a warehouse of germsFrom there, Corona spread - New York Post

சீனா கிருமிகள் அடங்கிய ஆயுத கிடங்கை வைத்துள்ளது அதில் இருந்தே கொரோனா பரவியது- நியூயார்க் போஸ்ட்

சீனா கிருமிகள் அடங்கிய ஆயுத கிடங்கை வைத்துள்ளது அதில் இருந்தே கொரோனா பரவியது- நியூயார்க் போஸ்ட்
சீனா தனது நாட்டில் கிருமிகள் அடங்கிய ஆயுத கிடங்கை வைத்துள்ளதாகவும், அதில் இருந்தே கொரோனா வைரஸ் வெளியேறியதாகவும் நியூயார்க் போஸ்ட் என்ற அமெரிக்க ஊடகம் தெரிவித்துள்ளது.
நியூயார்க்

சீனாவின் உகான் நகரத்தில் வன விலங்குகளை விற்பனை செய்யும் சந்தை ஒன்றில் இருந்து, கொரோனா வைரஸ் பரவியதாக உலகம் நம்பி வருகிறது. ஆனால், அமெரிக்காவைச் சேர்ந்த, ஸ்டிவன் டபிள்யூ மோசர்  என்கின்ற 
எழுத்தாளர் இந்த தகவல்கள் அனைத்தையும் திட்டவட்டமாக மறுத்துள்ளதுடன், அவர் நியூயார்க் போஸ்ட் பத்திரிக்கையில் எழுதியுள்ள கட்டுரையில் சீனாவின் உகான் நகரத்தில் தான் சீனாவின் நுண்ணுயிரிகள் ஆய்வகம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அங்கு பல கிருமிகளை சீனா வைத்துள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

கொரோனா பரவியதை தொடர்ந்து, சீனாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், கொரோனா வைரஸ் போன்ற புதிய மேம்பட்ட வைரஸ்களைக் கையாளும் வகையில், நுண்ணுயிரியல் ஆய்வகங்களில் பாதுகாப்பு நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் வகுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையே ஸ்டீவன் தனது வாதத்திற்கு ஆதாரமாக காட்டியுள்ளார். மேலும் அண்மையில் நடைபெற்ற அவசர கூட்டம் ஒன்றில் பேசிய சீன அதிபர் ஜி ஜின்பிங், எதிர்காலத்தில் கொரோனோ வைரஸ் தாக்குதல் போன்ற 
தாக்குதல்கள் ஏற்படாமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதன் மூலம் தங்களிடம் கொடூர கிருமிகள் பாதுகாக்கப்பட்டு வருவதை சீன அதிபர் மறைமுகமாக 
ஒப்புக் கொண்டதாக கட்டுரையாளர் ஸ்டீவன் சுட்டிக்காட்டியுள்ளார்.

சீன உயிரியல் ஆயுதம்  குறித்து ஆய்வு செய்த முன்னாள் இஸ்ரேலிய இராணுவ புலனாய்வு அதிகாரி டேனி ஷோஹாம் கூறும் போது 

இந்த உகான் இன்ஸ்டிடியூட் சீனாவின் ரகசிய உயிரியல் ஆயுத திட்டத்துடன் தொடர்புடையது . இந்த இன்ஸ்டிடியூட்டில் உள்ள சில ஆய்வகங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டின் அடிப்படையில், சீன உயிரியல் ஆயுத திட்டத்துடன் குறைந்தபட்சம் தொடர்புடையது. ஆனால் சீன உயிரியல் போரின் முக்கிய அங்கமாக இல்லை. உயிரியல் ஆயுதங்களுக்கான பணிகள்  உள்ளூர்-இராணுவ ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக நடத்தப்படுகின்றன என கூறி இருந்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. சீனாவில் 3 நகரங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு : லட்சக்கணக்கானோருக்கு பரிசோதனை
உலகில் முதன் முதலாக தொற்று பாதிப்பு வெளிப்பட்ட சீனாவில், இதுவரை 86 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. பூட்டானிய எல்லைக்குள் ஊடுருவி இந்தியாவின் டோக்லாமிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் சீனா- செயற்கைகோள் படங்கள்
சீனா பூட்டானிய எல்லைக்குள் டோக்லாம் பீடபூமியின் கிழக்கு பகுதியில் இரண்டு கிலோமீட்டர் ஊடுருவி சுமார் 9 கிலோமீட்டர் நீளமுள்ள ஒரு சாலையைக் கட்டியுள்ளது என உயர் தெளிவுத்திறன் கொண்ட செயற்கைக்கோள் படங்கள் காட்டுகிறது.
3. கொரோனாவை தடுக்க அவசர பயன்பாடாக சீனாவில் 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி
சீனாவில் கொரோனாவை தடுப்பதற்காக, அவசர பயன்பாடாக சைனோபார்ம் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசியை கிட்டத்தட்ட 10 லட்சம் பேருக்கு செலுத்தி உள்ளனர்.
4. தவறான வரைபடம் : இந்தியாவிடம் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கோரியது டுவிட்டர்
லடாக்கினை சீனாவின் பகுதியாக சித்தரித்து தவறான இந்திய வரைபடம் வெளியிட்ட விவகாரத்தில் பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டர் நிறுவனம் இந்திய அரசிடம் மன்னிப்புக் கோரியது.
5. சீனாவின் கொரோனா தடுப்பூசி எதிர்ப்பு சக்தியை தூண்டுகிறது - விஞ்ஞானிகள் தகவல்
சீனாவின் கொரோனா தடுப்பூசி எதிர்ப்பு சக்தியை தூண்டுவதாக அந்நாட்டு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.