தேசிய செய்திகள்

பிரதமர் வேண்டுகோளை ஏற்று ரெயில்வே துறை ரூ.151 கோடி நன்கொடை + "||" + Railways to donate Rs 151 crore to PM's request

பிரதமர் வேண்டுகோளை ஏற்று ரெயில்வே துறை ரூ.151 கோடி நன்கொடை

பிரதமர் வேண்டுகோளை ஏற்று ரெயில்வே துறை ரூ.151 கோடி நன்கொடை
பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ரெயில்வே துறை ரூ.151 கோடி நன்கொடை அளிக்கிறது.
புதுடெல்லி, 

கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் சூழ்நிலையில், அதன் தடுப்பு நடவடிக்கைகளுக்கு நன்கொடை அளிக்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்காக, பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலை நிவாரண நிதி (பி.எம்.கேர்ஸ் நிதி) என்ற பொது அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது.

இதன் தலைவராக பிரதமர் மோடி செயல்படுவார். ராணுவ மந்திரி, உள்துறை மந்திரி, நிதி மந்திரி ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

இந்நிலையில், பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று, இந்த நிதிக்கு ரெயில்வே துறை ரூ.151 கோடி நன்கொடை அளிக்க உள்ளதாக ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதில், “நான் ஒரு மாத சம்பளத்தையும், 13 லட்சம் ரெயில்வே மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் தங்கள் ஒரு நாள் சம்பளத்தையும் நன்கொடையாக வழங்குவார்கள். இதன் மொத்த தொகை ரூ.151 கோடி ஆகும்” என்று அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. பிரதமரின் ஆலோசகர் ஊரடங்கை மீறிய விவகாரம்: இங்கிலாந்து மந்திரி திடீர் ராஜினாமா
பிரதமரின் ஆலோசகர் ஊரடங்கை மீறிய விவகாரத்தில், இங்கிலாந்து மந்திரி தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.
2. புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு நடந்து வரவேண்டாம்; மராட்டிய முதல் மந்திரி வேண்டுகோள்
புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு நடந்து வரவேண்டாம் என மராட்டிய முதல் மந்திரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
3. அரசு துறைகள் சிக்கன நடவடிக்கைகளை கடைப்பிடிப்பது அவசியம் கவர்னர் கிரண்பெடி வேண்டுகோள்
அனைத்து அரசு துறைகளும் செலவினங்களை குறைத்து சிக்கன நடவடிக்கைகளை பின்பற்றவேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
4. வங்கி கடனை மக்கள் திருப்பி செலுத்தவேண்டும் அமைச்சர் கந்தசாமி வேண்டுகோள்
வங்கியில் வாங்கிய கடன்களை பொதுமக்கள் திருப்பி செலுத்தவேண்டும் என்று அமைச்சர் கந்தசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
5. கொரோனா தடுப்பு பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்
கொரோனா தடுப்பு பணியாளர்களுக்கு சென்னை மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.