உலக செய்திகள்

‘கொரோனா சாவு பற்றிய உண்மையை சீனா மறைக்கிறது’ - அமெரிக்கா குற்றச்சாட்டு + "||" + "China is hiding the truth about the death Corona" - USA accusation

‘கொரோனா சாவு பற்றிய உண்மையை சீனா மறைக்கிறது’ - அமெரிக்கா குற்றச்சாட்டு

‘கொரோனா சாவு பற்றிய உண்மையை சீனா மறைக்கிறது’ - அமெரிக்கா குற்றச்சாட்டு
கொரோனா சாவு பற்றிய உண்மையை சீனா மறைப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
வாஷிங்டன், 

கொரோனா சாவு பற்றிய உண்மைகளை சீனா மறைப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டி உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் உள்ள உகான் நகரில்தான் முதன் முதலில் கொரோனா வைரஸ் அறிகுறி தென்பட்டது. அங்கு வேகமாக பரவியதால், அந்த நகரில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்களின் வாழ்க்கை முடக்கப்பட்டது. அங்கு கொரோனா தாக்கி ஏராளமானோர் பலி ஆனார்கள்.

என்றாலும் சீன அரசு எடுத்த கடுமையான நடவடிக்கைகள் காரணமாக கொரோனா பரவுவது கட்டுப்படுத்தப்பட்டது. ஆனாலும் அந்த நாட்டில் 81 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 3,310-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து இருக்கிறார்கள்.

சீனாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு பரவிய கொரோனா சீனாவை விட இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளில் அதிக உயிச்சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் சுமார் 5,100 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருப்பதோடு, 2 லட்சத்து 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

கொரோனா வைரஸ் பரவியதற்கு சீனாதான் காரணம் என்று ஏற்கனவே அமெரிக்க ராணுவம் குற்றம்சாட்டி இருந்தது. இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்தநிலையில், தங்கள் நாட்டில் நிகழ்ந்த கொரோனா சாவு பற்றிய உண்மையான தகவல்களை மூடி மறைப்பதாக குற்றம்சாட்டி அமெரிக்க குடியரசு கட்சியின் எம்.பி.க்கள் பென் செஸ்சே, மைக்கேல் மெக்கால் ஆகியோர், புலனாய்வு துறையின் அறிக்கையை மேற்கோள் காட்டி அறிக்கை வெளியிட்டு உள்ளனர்.

இதுகுறித்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், சீனா தெரிவிக்கும் தகவல்கள் துல்லியமானவை என்று நமக்கு எப்படி தெரியும்? என்று கேள்வி எழுப்பியதோடு, எண்ணிக்கையை அவர்கள் குறைத்து வெளியிடுவதாகவே தெரிகிறது என்றார்.

என்றாலும், சீனாவுடன் நல்லுறவு இருந்து வருவதாகவும், அந்த நாட்டின் அதிபர் ஜின்பிங் தனக்கு நெருக்கமானவர் என்றும் டிரம்ப் தெரிவித்தார்.

அமெரிக்க குடியரசு கட்சி எம்.பி.க்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தங்கள் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலியானவர்கள் பற்றிய தவறான தகவல்களை தெரிவித்து சர்வதேச சமுதாயத்தை சீனா ஏமாற்றுகிறது. சீனா தெரிவிக்கும் எண்ணிக்கை பொய்யானது.

இந்த விஷயத்தில் சீனா ஏற்கனவே பொய் சொல்லியது, இப்போதும் பொய் சொல்கிறது, இனி தொடர்ந்து பொய் சொல்லும். கொரோனா தொடர்பாக குப்பையான பிரசாரத்தை அந்த நாடு செய்து வருகிறது.

அமெரிக்காவை விட தங்கள் நாட்டில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை குறைவு என்று காட்டிக் கொள்வதற்காக சீனா இப்படி செய்கிறது. உண்மை தகவல்களை தெரிவிக்க விடாமல் டாக்டர்களையும், பத்திரிகையாளர்களையும் அடக்கி வைத்து இருக்கிறது. எனவே கொரோனா வைரசை ஒழிப்பதற்கான போரில் சீனாவை நம்பத்தகுந்த பங்குதாரராக கருத முடியாது.

கொரோனா பாதிப்பு தொடர்பாக சீனா என்னென்ன தகவல்களை மறைக்கிறது என்பதை அமெரிக்க புலானாய்வு துறை விசாரணை நடத்தி கண்டுபிடிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

கொரோனா ஒழிப்பு நடவடிக்கைக்காக டிரம்ப் நிர்வாகம் அமைத்துள்ள சிறப்பு குழுவில் உறுப்பினராக இடம் பெற்றுள்ள டாக்டர் டெபோரா பிர்சும், கொரோனாவால் சீனாவில் ஏற்பட்டுள்ள பாதிப்பு மிகவும் தீவிரமானது என்றும், ஆனால் உண்மையான தகவல்கள் மறைக்கப்படுவதாகவும் தெரிவித்து இருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. டொனால்டு டிரம்ப் பிரதமர் மோடி இடையே சமீபத்தில் எந்த உரையாடலும் நடைபெறவில்லை -தகவல்கள்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பிரதமர் மோடி இடையே சமீபத்தில் எந்த உரையாடலும் நடைபெறவில்லை என வெளியுறவுத்துறை அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவித்து உள்ளது.
2. உலகில் கொரோனா பாதிப்பு தரவரிசையில் இந்தியாவுக்கு 9-வது இடம்; மரணங்களில் சீனாவை முந்தியது
உலகில் கொரோனா வைரஸ் பாதிப்பு தரவரிசையில் இந்தியா 9-வது இடத்தில் உள்ளது, இறப்பு எண்ணிக்கையில் சீனாவை முந்தி உள்ளது.
3. சீனாவுடனான எல்லை பிரச்சினையில் பிரதமர் மோடி "நல்ல மனநிலையில்" இல்லை - டொனால்டு டிரம்ப்
சீனாவுடனான எல்லை பிரச்சினையில் பிரதமர் மோடி "நல்ல மனநிலையில்" இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறி உள்ளார்.
4. சிறுவனுக்கு கொரோனா பாதிப்பு: சுகாதாரத்துறைக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும்
புதுச்சேரியில் மேலும் ஒரு சிறுவனுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. சுகாதாரத்துறைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்று அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
5. கொரோனா பாதிப்பு எண்ணிக்கையைப் பார்த்து மக்கள் அச்சப்பட வேண்டாம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
கொரோனா பாதிப்பு எண்ணிக்கையைப் பார்த்து மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.