தேசிய செய்திகள்

கொரோனாவை ஒழிக்க ஒன்றுபடுவோம்: ‘நாளை இரவு 9 மணிக்கு வீட்டு வாசலில் ஒளிவிளக்கு ஏந்தி நில்லுங்கள்’ - நாட்டு மக்களுக்கு மோடி வேண்டுகோள் + "||" + Let's unite to eradicate coronation: Modi's appeal to the people of India

கொரோனாவை ஒழிக்க ஒன்றுபடுவோம்: ‘நாளை இரவு 9 மணிக்கு வீட்டு வாசலில் ஒளிவிளக்கு ஏந்தி நில்லுங்கள்’ - நாட்டு மக்களுக்கு மோடி வேண்டுகோள்

கொரோனாவை ஒழிக்க ஒன்றுபடுவோம்: ‘நாளை இரவு 9 மணிக்கு வீட்டு வாசலில் ஒளிவிளக்கு ஏந்தி நில்லுங்கள்’ - நாட்டு மக்களுக்கு மோடி வேண்டுகோள்
கொரோனாவை ஒழிக்க ஒன்றுபடும் வகையில், மக்கள் அனைவரும் நாளை இரவு 9 மணிக்கு தங்கள் வீட்டு வாசலில் ஒளிவிளக்கு ஏந்தி நிற்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
புதுடெல்லி, 

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இது தொடர்பாக பிரதமர் மோடி அவ்வப்போது மாநில முதல்-மந்திரிகளை தொடர்பு கொண்டு பேசி வருகிறார். நேற்று முன்தினமும் அவர் சில மாநிலங்களின் முதல்-மந்திரிகளுடன் காணொலி காட்சி மூலம் பேசினார்.

இந்த நிலையில் நேற்று காலை தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு மோடி உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது:-

இன்று கொரோனா தொற்றுக்கு எதிரான நாடு தழுவிய அளவில் கடைப்பிடிக்கப்படும் ஊரடங்கின் 9-வது நாள். இந்த காலகட்டத்தில் நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து கடைப்பிடித்த கட்டுப்பாடு மற்றும் சேவை மனப்பான்மை ஆகியவை வரலாறு காணாதது. இவை இரண்டின் உருவகமாக நீங்கள் அனைவரும் விளங்கினீர்கள்.

அரசு, நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இயன்றவரை நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வருகிறவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கடந்த மார்ச் 22-ந் தேதியன்று நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து நன்றியை தெரிவித்தது, இன்று அனைத்து நாடுகளும் கடைப்பிடிக்க எடுத்துக் காட்டாக அமைந்துள்ளது.

மக்கள் சுய ஊரடங்கு, மணி ஓசை, கைதட்டுதல் அல்லது தட்டுகளை தட்டி ஒலியெழுப்புதல் ஆகியவை சோதனையான காலக்கட்டத்தில் மக்களின் ஒன்றிணைந்த சக்தியை இந்த நாடு, அனைவருக்கும் உணர வைத்தது. கொரோனாவுக்கு எதிரான போரில் இந்த தேசமே ஒன்றிணைய முடியும் என்ற ஆழமான நம்பிக்கையை அளித்தது. இதேபோன்ற ஒன்றிணைந்த உங்களுடைய ஒத்துழைப்பு மற்றும் உற்சாக மனநிலை தற்போது ஊரடங்கு அமலில் உள்ள நாட்களிலும் வெளிப்படுகிறது.

இன்று இந்த நாட்டின் கோடிக்கணக்கான மக்கள், தங்களை தாங்களே கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு வீடுகளில் முடங்கி இருக்கின்றனர். இந்த நேரத்தில் நாங்கள் மட்டும் என்ன செய்ய முடியும் என்பது இயற்கையாக ஒருவருக்கும் எழும் கேள்வியாகும். இதுபோன்ற தொற்றுக்கு எதிராக தாங்கள் மட்டுமே எப்படி போராட முடியும் என்றும் ஒருசிலர் கவலைப்படலாம். இதேபோல் எத்தனை நாட்களை கழிக்கப்போகிறோம் என்று பலரும் அச்சம் கொள்ளலாம்.

இது கண்டிப்பாக ஊரடங்குதான். நம்மில் பலரும் கண்டிப்பாக நம்முடைய வீட்டுக் குள்ளேயே அடங்கித்தான் இருக்கிறோம். ஆனால் நாம் யாரும் தனியாக இல்லை. 130 கோடி இந்தியர்களின் ஒன்றிணைந்த வலிமை நம்முடன் உள்ளது. அது நம் ஒவ்வொருவரின் வலிமை. அவ்வப்போது இது போன்ற ஒன்றிணைந்த வலிமையின் மாட்சிமையை, தெய்வீகத்தன்மையை உணர்ந்து கொள்வது நம்முடைய நாட்டுக்கும், மக்களுக் கும் அவசியமாக தேவைப்படுகிறது.

இதுபோன்ற பெரும் போருக்கு எதிராக மக்கள் ஒன்றாக இணையும்போது அதை மக்களின் வடிவில் ஒன்றிணைந்த மகாசக்தியாக ஒவ்வொருவரும் உணர வேண்டும். இந்த அனுபவம் நம்முடைய மனவலிமையை அதிகரிக்கும். தெளிவான பாதையை நமக்கு அது காட்டும். இதனை செயல்படுத்துவதற்கான பொது நோக்கம் மற்றும் வலிமையை அனைவருக்கும் அளிக்கும்.

தற்போது கொரோனா வைரஸ் தொற்று, திசை எங்கும் பரப்பி வரும் இருளுக்கு எதிராக வெளிச்சம் மற்றும் நம்பிக்கையை நோக்கி நாம் முன்னேற வேண்டும். இந்த வைரசால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளவர்களை நம்முடைய சகோதர, சகோதரிகளாக ஏற்று, அவர்களின் சோர்வை விலக்கி நம்பிக்கை வழியில் கொண்டு செல்ல வேண்டும். கொரோனாவால் வந்த இருள் மற்றும் நிச்சயமற்ற தன்மைக்கு எதிராக ஒளியின் வலிமையை நாம் நான்கு திசைகளுக்கும் எடுத்துச் செல்லவேண்டும்.

எனவே, வருகிற 5-ந்தேதி (நாளை) நாம் அனைவரும் ஒன்றிணைந்து கொரோனா வைரஸ் பரப்பி வரும் இருளுக்கு எதிராக ஒளியின் வலிமையை எடுத்துக் காட்டுவோம். அன்று, 130 கோடி இந்தியர்களின் மாபெரும் வலிமையின் தன்மையை உச்சத்துக்கு எடுத்துச் செல்வோம்.

அன்று இரவு 9 மணிக்கு உங்கள் இல்லங்களில் எரியும் அனைத்து விளக்குகளையும் அணைத்து விடுங்கள். உங்கள் வீட்டின் வாசல் படியில் இருந்தோ அல்லது பால்கனியில் இருந்தோ, ஒளியேற்றப்பட்ட மெழுகுவர்த்தி, அகல் விளக்கு, டார்ச் லைட் அல்லது உங்கள் மொபைல் போனின் டார்ச் ஒளியை ஏந்தி 9 நிமிடங்கள் நில்லுங்கள்.

நாம் ஒவ்வொருவரும் அனைத்து திசைகளில் இருந்தும் ஒரு விளக்கை ஏந்தி நின்றால் அந்த பேரொளியின் மாபெரும் சக்தியை நாம் உணர முடியும். நாம் அனைவரும் எதற்கு எதிராக போராடுகிறோம் என்ற பொதுவான நோக்கத்தை அது வெளிச்சம் போட்டுக் காட்டும். அந்த ஒளிச்சிதறலில், பிரமாண்டமான அந்த பேரொளியில் நான் தனியாக இல்லை நாம் யாருமே தனியானவர்கள் இல்லை என்று 130 கோடி இந்தியர்களும் ஒன்றிணைந்து உறுதியெடுப்போம்.

இது தொடர்பாக என்னிடம் மற்றொரு வேண்டுகோளும் உள்ளது. இதில் கலந்து கொள்ளும் யாரும் எங்கும் கூட் டமாக ஒன்று சேரக்கூடாது. தயவு செய்து சாலைகளுக்கோ, உங்கள் தெருக்களிலோ அல்லது உங்கள் பகுதிக்கோ ஒன்றிணைந்து யாரும் செல்லாதீர்கள். உங்கள் வீட்டின் வாசல் அல்லது பால்கனியில் இருந்து விளக்கை ஏந்துங்கள்.

சமூக விலகலின் லட்சுமணன் கோட்டை யாரும் தாண்டக் கூடாது. எந்த சூழ்நிலையிலும் சமூக விலகலை மீறக்கூடாது. இது ஒன்றே நாம் கொரோனா சங்கிலியை உடைத்தெறிவதற் கான சஞ்சீவி மருந்தாகும்.

எனவே, 5-ந்தேதி இரவு 9 மணிக்கு தனிமையில் அமர்ந்து சிறிது நேரத்துக்கு பாரத அன்னையை, 130 கோடி இந்தியர்களின் முகங்களை மனதில் கொண்டு வாருங்கள். கூட்டான உறுதிப்பாட்டை உணருங்கள். 130 கோடி இந்தியர்கள் ஒன்றிணைந்த மகாசக்தியின் வலிமையை உணருங்கள். இது போன்ற நெருக்கடியான வேளையில் போரிடுவதற்கான வலிமையும், வெல்வதற்கான நம்பிக்கையும் இது நமக்கு அளிக்கும்.

நம்முடைய அர்ப்பணிப்பு மற்றும் உற்சாகமான பங்கேற்பை, மிஞ்சும் வலிமை ஏதும் இந்த உலகில் இல்லை. இந்த வலிமையின் அடிப்படையில் இந்த உலகில் நாம் சாதிக்க முடியாதது என்பது எதுவும் இல்லை. நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த கொரோனா வைரஸ் தொற்றை முற்றிலுமாக அழித்து இந்தியாவை வெற்றி பெறச் செய்வோம். இவ்வாறு மோடி கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் கொரோனாவுக்கு 6 பேர் பலி
திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் நேற்று ஒரேநாளில் 6 பேர் கொரோனாவுக்கு பலியாகினர்.
2. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் அமைச்சர் கே.பி.அன்பழகன் குணம் அடைந்து வருகிறார் - மருத்துவமனை தகவல்
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் கே.பி.அன்பழகன் குணம் அடைந்து வருகிறார் என்றும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
3. கொரோனாவை கட்டுப்படுத்தி உலகத்தின் கவனத்தை கவர்ந்த தாராவி: உலக சுகாதார நிறுவனம் பாராட்டு
கொரோனாவை கட்டுப்படுத்தி உலகத்தின் கவனத்தை கவர்ந்த தாராவிக்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு தெரிவித்துள்ளது.
4. மதுரையில் கொரோனாவுக்கு 6 பேர் சாவு ; புதிதாக 192 பேருக்கு நோய் தொற்று
மதுரையில் கொரோனாவுக்கு 6 பேர் உயிரிழந்தனர். இதுபோல் நேற்று புதிதாக 192 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
5. கோவை, நீலகிரியில்7 பேர் கொரோனாவுக்கு பலி
கோவை, நீலகிரியில் 7 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள்.