தேசிய செய்திகள்

நாளை இரவு எல்லா மின்விளக்குகளையும் ஒரே நேரத்தில் அணைப்பதால் மின்தொகுப்பு பாதிக்கப்படாது-மத்திய மந்திரி + "||" + No threat to grid from PM's lights-out call on Sunday

நாளை இரவு எல்லா மின்விளக்குகளையும் ஒரே நேரத்தில் அணைப்பதால் மின்தொகுப்பு பாதிக்கப்படாது-மத்திய மந்திரி

நாளை இரவு எல்லா மின்விளக்குகளையும் ஒரே நேரத்தில் அணைப்பதால் மின்தொகுப்பு பாதிக்கப்படாது-மத்திய மந்திரி
நாளை இரவு எல்லா மின்விளக்குகளையும் ஒரே நேரத்தில் அணைப்பதால் மின்தொகுப்பு பாதிக்கப்படாது என மத்திய மின்துறை மந்திரி ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி

வருகிற 5-ந்தேதி (நாளை)  இரவு 9 மணிக்கு உங்கள் இல்லங்களில் எரியும் அனைத்து விளக்குகளையும் அணைத்து விடுங்கள். உங்கள் வீட்டின் வாசல் படியில் இருந்தோ அல்லது பால்கனியில் இருந்தோ, ஒளியேற்றப்பட்ட மெழுகுவர்த்தி, அகல் விளக்கு, டார்ச் லைட் அல்லது உங்கள் மொபைல் போனின் டார்ச் ஒளியை ஏந்தி 9 நிமிடங்கள் நில்லுங்கள் என பிரதமர் நேற்று உரையாற்றினார்.

9 நிமிடம் மின்சாரத்தை ஓட்டுமொத்தமாக நாடுமுழுவதும் நிறுத்துவதால் மின்சார சப்ளை பாதிப்பு ஏற்படும் என கூறப்பட்டட்து. 

இந்த நிலையில் எல்லா மின்விளக்குகளையும் ஒரே நேரத்தில் அணைப்பதால் மின்தொகுப்பு பாதிக்கப்படாது என மத்திய மின்துறை மந்திரி ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார். 

மந்திரி ஆர்.கே சிங் கூறியதாவது:-

நாடு முழுவதும் மின் விளக்குகளை அணைப்பதால் 15 ஜிகாவாட் மின்தேவை குறையும் எனவும், இது 
ஒட்டுமொத்தத் தேவையில் 4 விழுக்காட்டுக்கும் குறைவுதான்.

புதுப்பிக்கவல்ல எரியாற்றல், நீர்மின் நிலையங்கள், அனல்மின் நிலையங்களில் மின்னுற்பத்தியைக் குறைக்கவும், அதிகரிக்கவும் முடியும் என்பதால் மின்தொகுப்பில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை.

விளக்குகள் அணைக்கப்படும் நேரத்தில் மின்னுற்பத்தி, மின் வழங்கல் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தேசிய அனல்மின்கழகம் தெரிவித்துள்ளது. ஊரடங்கால் மின்தேவையில் 25 விழுக்காடு குறைந்துள்ள நிலையிலும் மின்தொகுப்பு சீராக இருப்பதாக தெரிவித்து உள்ளார்.                   

தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் இன்று 67-பேருக்கு கொரோனா தொற்று உறுதி- முதல்வர் பினராயி விஜயன்
கேரளாவில் இன்று மேலும் 47-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
2. ஊரடங்கு திட்டம் தோல்வியில் முடிந்துள்ளது, எந்த பலனும் அளிக்கவில்லை - மத்திய அரசு மீது ராகுல் காந்தி விமர்சனம்
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கின் 4 கட்டங்களும் தோல்வியில் முடிந்திருப்பதாக மத்திய அரசை சாடியுள்ள ராகுல் காந்தி, ஊரடங்கால் எந்த பலனும் கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
3. நெல்லையில் உயரும் கொரோனா பாதிப்பு; 32 பேருக்கு உறுதி
நெல்லையில் 32 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
4. கொரோனா பாதிப்பு; மராட்டியத்தில் பலி எண்ணிக்கை 1,695 ஆக உயர்வு
நாட்டிலேயே கொரோனா பாதிப்புக்கு மிக அதிகளவாக மராட்டியத்தில் 1,695 பேர் பலியாகி உள்ளனர்.
5. கொரோனா பாதிப்பு; இந்தியா உள்பட கூடுதலாக 11 நாட்டு மக்களுக்கு ஜப்பானில் நுழைய தடை
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இந்தியா உள்பட கூடுதலாக 11 நாடுகளின் மக்களுக்கு ஜப்பானில் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது.