தேசிய செய்திகள்

கொரோனாவுக்கு நன்கொடை: ஒற்றுமை சிலை ரூ.30 ஆயிரம் கோடிக்கு விற்பனை விளம்பரம் கொடுத்தவர் கைது + "||" + FIR lodged for trying to 'sell' Statue of Unity for ₹30,000 cr on OLX

கொரோனாவுக்கு நன்கொடை: ஒற்றுமை சிலை ரூ.30 ஆயிரம் கோடிக்கு விற்பனை விளம்பரம் கொடுத்தவர் கைது

கொரோனாவுக்கு நன்கொடை: ஒற்றுமை சிலை ரூ.30 ஆயிரம் கோடிக்கு விற்பனை விளம்பரம் கொடுத்தவர் கைது
கொரோனா தாக்குதலுக்கு நன்கொடை கொடுப்பதற்காக உலகின் மிக உயரமான சிலையான வல்லபாய் பட்டேலின் சிலையை விற்பதாக விளம்பரம் செய்தவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அகமதாபாத்

குஜராத் மாநிலம், கெவாடியாவில் 182 மீட்டர் உயரத்தில் சர்தார் படேல் ஒற்றுமை சிலை அமைக்கப்பட்டுள்ளது. 2 ஆயிரத்து 989 கோடி ரூபாய் மதிப்பில் இந்தச் சிலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சையளிக்க சிறப்பு மருத்துவமனைகள் கட்டவும், மருத்துவ உள்கட்டமைப்பு பணிகளுக்கான செலவை ஈடுகட்டுவதற்காகவும், சுகாதார உபகரணங்கள் வாங்குவதற்காகவும் இந்த சிலை 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய உள்ளதாக ஓஎல்எக்ஸ் வலைதளத்தில் ஒருவர் கடந்த சனிக்கிழமை விளம்பரம் செய்துள்ளார்.

இதுகுறித்து செய்தித்தாள்களில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து விளம்பரம் செய்த நபர் மீது வழக்குப் பதிவு செய்து குஜராத் போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில் இந்த விளம்பரத்தை தனது தளத்தில் இருந்து ஓஎல்எக்ஸ் நிறுவனம் நீக்கியுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. ஜி 7 உச்சி மாநாடு: டிரம்ப் அழைப்பை நிராகரித்த ஏஞ்சலா மெர்க்கல்
அமெரிக்காவில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்குமாறு ஜனாதிபதி டிரம்ப் விடுத்த அழைப்பை ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் நிராகரித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
2. சென்னையில் 1,400 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
1,400 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் சென்னையில் அமைக்கப்படுகிறது என சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
3. சென்னை,திருவள்ளூர்,செங்கல்பட்டு உள்பட 13 நகரங்களில் கடுமையான ஊரடங்கை அமல்படுத்த திட்டம்?
சென்னை,திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட 13 நகரங்களில் கடுமையான சட்டதிட்டங்களுடன் இரண்டு வாரங்களுக்கு 5-வது கட்ட ஊரடங்கை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
4. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 173,763 ஆக உயர்வு
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 173,763 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு எண்ணிக்கை 4971ஆக உயர்ந்து உள்ளது.
5. 60 பணியாளர்களுடன் சின்னத்திரை படப்பிடிப்பை நடத்த அனுமதி
60 பணியாளர்களுடன் நாளை முதல் சின்னத்திரை படப்பிடிப்பை நடத்தலாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.