தேசிய செய்திகள்

ஐரோப்பா- அமெரிக்காவை ஆட்டிபடைக்கும் கொரோனாவின் வேகம் இந்தியாவில் பலிக்காதது ஏன்? + "||" + Non-conquest will overtake Europe and America The speed of the coron Why not sacrifice in India?

ஐரோப்பா- அமெரிக்காவை ஆட்டிபடைக்கும் கொரோனாவின் வேகம் இந்தியாவில் பலிக்காதது ஏன்?

ஐரோப்பா- அமெரிக்காவை ஆட்டிபடைக்கும் கொரோனாவின் வேகம் இந்தியாவில் பலிக்காதது ஏன்?
அமெரிக்கா, சீனா, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளை ஒப்பிடும் போது, இந்தியாவில் கொரோனாவின் வேகம் மிகவும் குறைவு என்றே சொல்லலாம் அதற்குரிய காரணங்களை டாக்டர் நாரேந்திர குமார் வர்மா விளக்குகிறார்.
புதுடெல்லி

இன்று காலை நிலவரப்படி உலகம் முழுவதும் 12 லட்சத்து 73 ஆயிரத்து 709 பேருக்கு வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 69 ஆயிரத்து 456 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில் 2 லட்சத்து 62 ஆயிரத்து 486 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் மட்டும் 3.36 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  9,616  பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். ஸ்பெயினில் 131,168 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்பெயினில் கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்பு 12,641 ஆக உள்ளது.  இத்தாலியில்  128,948 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இத்தாலியில் 15,887- பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் இன்றைய நிலவரப்படி 4247 ஆக உள்ளது. சீனாவை விட மக்கள் நெரிசல் மிக்க இந்தியாவில் கொரோனா பரவினால், 30 கோடி பேர் பாதிக்கப்படுவார்கள், 20 முதல் 25 லட்சம் பேர் வரை இறப்பார்கள் என்று சில வல்லுனர்கள் அச்சம் தெரிவித்தனர். அமெரிக்கா, சீனா, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளை ஒப்பிடும் போது, இந்தியாவில் கொரோனாவின் வேகம் மிகவும் குறைவு என்றே சொல்லலாம்

இதற்கு மூன்று காரணங்கள் உள்ளன. இவைகள் தான் இந்தியாவில் இருக்கும் மக்களை கொரோனாவில் இருந்து பாதுகாத்து என்று கூறுகிறார் டாக்டர் நாரேந்திர குமார் வர்மா.

எய்ம்ஸ் மருத்துவமனையில் பல ஆண்டுகளாக ஆய்வு நடத்திய  நரேந்திர குமார் வர்மா இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் குறித்து கூறியதாவது:-

இந்திய மக்களுக்கு பொதுவாக அதிக நோய் எதிர்ப்பு சக்தி உண்டு. அளவுக்கு அதிகமான நுண் கிருமிகள் உடலில் கலந்திருப்பதே நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக காரணம்.ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளை ஒப்பிடுகளையில், இந்தியாவில் ஆஸ்துமா, எய்ட்ஸ், மலேரியா போன்ற நோய்கள் கடுமையாக பாதிப்பை ஏற்படுத்தின.

பலவிதமான வைரஸ், பாக்டீரியாக்கள், ஒட்டுண்ணிகளால் இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கெட்டதிலும் ஒரு நன்மை என்பது போல, அதிக வைரஸ் பாதிப்பு காரணமாக, இந்தியர்களின் உடலில் குறிப்பிட்ட T-செல்கள் உருவாகின்றன.இதை T-உயிரணுக்கள் என்று சொல்லலாம். அந்நிய வைரஸிடமிருந்து, நம் உடலை பாதுகாப்பதில் போர் வீரரனைப் போன்று, T-செல்கள் செயல்படுகின்றன. வெளியில் இருந்து ஏதேனும் புதுவிதமான வைரஸ்களநம் உடலில் நுழைந்தால்,T-செல்கள் தாக்கி அழித்துவிடும்.

இதன் காரணமே கொரோனா இந்தியாவில் தீவிரமாக பரவவில்லை. சுத்தம், சுகாதாரத்தோடு வாழும் ஐரோப்பா, அமெரிக்க நாட்டினருக்கு இது போன்ற T-செல்கள் குறைவாக இருப்பது பின்னடைவு தான், வைரஸ் நோய்களில் இருந்து மீள்வதற்கு இந்தியாவில், குளோரோகுயின், ஹைட்ராக்ஸோ குளோரோகுயின் மருந்துகளை அதிகள் அளவில் பயன்படுத்தியுள்ளனர்.

இந்த மருந்துகளின் வீரியம், இன்றளவும் இந்தியர்களின் உடலில் உள்ளது. இது இப்போது அவர்களுக்கு எதிர்பாரத பலனை அளித்துள்ளது.

இந்தியர்கள் உணவில் பயன்படுத்தும் மசால் மற்றும் நறுமணப் பொருட்கள் போன்றவை தான், மஞ்சள், மிளகு, சீரகம், பூண்டு, இஞ்சி, திப்பிளி, ஏலக்காய், கிராம்பு, புதினா, ஜாதிக்காய், கருஞ்சீரகம், இப்படி பல இருக்கின்றன.இவை அனைத்திற்கும் தனி தனி மருத்துவ குணங்கள் இருக்கின்றன. ஆயுர்வேத இந்திய மருத்துவ முறைகளில், நறுமணப் பொருட்களின் பங்களிப்பை யாராலும் மறுக்க முடியாது, பயன்படுத்தப்படும் பலவிதமான நறுமணப் பொருட்கள், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கின்றன.

இதை அலோபதி மருத்துவர்கள் கூட மறுக்கமாட்டார்கள், டெங்கு பரவிய போது, நிலவேம்பு குடிநீர் பயன்பட்டது. அதே போன்று இப்போது இந்தியாவில், நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுவதற்கு கபசூர குடிநீர் வந்துவிட்டது. பல வித இந்திய நறுமணப் பொருட்களை கொண்டு தயாரானது தான் இந்த கபசூர குடிநீர்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாட்டவர்கள் சீனர்களுடன் ஒப்பிடும் போது, அன்றாட உணவில் இந்தியர்கள் சேர்த்து கொள்ளும்,பொருட்கள் கொரோனாவில் இருந்து அவர்களை பாதுகாக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

உடலுக்குன் நோயேதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், மரபணுக்களின் அமைப்புதான் இம்முனி சிஸ்டம் (Immunue Syste) வைரஸ்களை அழித்து நம்மை பாதுகாக்கும் இம்முனி சிஸ்டத்தின் அங்கம் ஹெச்.எல்.எ ஜீன், இந்த மரபணுக்களின் வேலை என்ன என்றால், உடலில் அந்நிய வைரஸ் நுழைந்தால், ஹெச்.எல்.எ மரபணுக்கள் அடையாளம் கண்டதுடன், உடனடியாக இம்முனி சிஸ்டத்தை உஷார் படுத்துவிடுகிறது.

அதை தொடர்ந்து T-செல்கள் போர் வீரனாக செயல்புரிந்து, அந்நிய வைரஸ்களை அழிக்கும், இதில் ஹெச்.எல்.இ மரபணுக்களின் பங்கு மிகவும் முக்கியம்.பல வித வைரஸ் கிருமிகளால், பாதிக்கப்பட்டுள்ள இந்தியர்களின் உடலில், சில குறிப்பிட்ட வகையான ஹெச்.எல்.எ அணுக்கள், அதிக அளவில் இருக்கின்றன.அது போன்ற ஹெச்.எல்.எ மரபணுக்கள், ஐரோப்பிய, அமெரிக்க, சீன மக்களின் இம்முனி சிஸ்டத்தின்  குறைவு தான், இதனால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கிறது என கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது
இந்தியாவில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் கொரோனா தொற்று தினம் தினம் புதிய உச்சத்தை எட்டி வருகிறது.
2. தந்தையை 1200 கிலோமீட்டர் சைக்கிளில் அழைத்து வந்த மகளை பாராட்டிய இவான்கா டிரம்ப்
காயமுற்ற தந்தையை 1200 கிலோமீட்டர் சைக்கிளில் அழைத்து வந்த மகளை அழகிய சாதனை என இவான்கா டிரம்ப் பாராட்டி உள்ளார்
3. உத்திரபிரதேசத்துக்கு பதிலாக ஒடிசாவுக்குச் சென்ற புலம் பெயர்ந்த தொழிலாளர்கள சிறப்பு ரெயில்
உத்திரபிரதேசத்துக்கு பதிலாக ஒடிசாவுக்குச் சென்ற புலம் பெயர்ந்த தொழிலாளர்கள சிறப்பு ரெயில். பரிதவிக்கும் தொழிலாளர்கள்.
4. புதுச்சேரியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கிறது.
5. உலகளாவிய நோய்த்தடுப்பு முறைக்கு இடையூறு கொரோனா தடுப்பூசிகளை தாமதப்படுத்தலாம்
உலகளாவிய நோய்த்தடுப்பு முறைக்கு ஏற்பட்டுள்ள இடையூறு கொரோனா தடுப்பூசிகளை தாமதப்படுத்தலாம் என கூறப்படுகிறது.