தேசிய செய்திகள்

இந்தியாவில் ‘கொரோனாவுக்கு எதிராக நீண்ட போர் தொடங்கி இருக்கிறது’ - பிரதமர் மோடி பேச்சு + "||" + Long war against Corona in India begins - PM Modi

இந்தியாவில் ‘கொரோனாவுக்கு எதிராக நீண்ட போர் தொடங்கி இருக்கிறது’ - பிரதமர் மோடி பேச்சு

இந்தியாவில் ‘கொரோனாவுக்கு எதிராக நீண்ட போர் தொடங்கி இருக்கிறது’ - பிரதமர் மோடி பேச்சு
இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக நீண்ட போர் தொடங்கி இருப்பதாக பிரதமர் மோடி கூறினார்.
புதுடெல்லி, 

பாரதீய ஜனதா கட்சியின் 40-வது நிறுவன நாளையொட்டி அக்கட்சியின் தொண்டர்களுடன் பிரதமர் மோடி நேற்று பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளும், இந்த நோய்க்கிருமி பரவுவதால் ஏற்படும் ஆபத்தை புரிந்து கொண்டு அதை ஒழிப்பதற்கான விரிவான நடவடிக்கைகளை எடுத்து உள்ளன. கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகள் உலகுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறது. நாம் எடுத்து வரும் நடவடிக்கைகளை பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பாராட்டி உள்ளனர். உலக சுகாதார அமைப்பும் பாராட்டி இருக்கிறது.

கொரோனாவால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க முககவசம் அணியாமல் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று வலியுறுத்தி கூறி இருக்கிறோம். நோய்க்கிருமி தொற்று ஏற்படாமல் இருக்க என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றியும் விளக்கி இருக்கிறோம்.

வெளிநாடுகளில் சிக்கி தவித்த இந்தியர்களை அழைத்து வந்த போது அவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை உள்ளிட்டவற்றை மேற்கொண்டு இருக்கிறோம். சில நாடுகளின் விமானங்கள் வருவதற்கு உடனடியாக தடை விதிக்கப்பட்டது. நோயை கண்டறிந்து கட்டுப்படுத்துவதற்கு தேவையான மருத்துவ உபகரணங்களையும் தயாராக வைத்து இருக்கிறோம். நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்று மாநிலங்களின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தி வருகிறோம்.

கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக சார்க் நாடுகள் மற்றும் ஜி-20 நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தை கூட்டி ஆலோசித்ததில் இந்தியாவின் பங்கு முக்கியமானது ஆகும். இந்த விஷயத்தில் பல்வேறு நாடுகளுடனும் இணைந்து இந்தியா செயல்படுகிறது. சில நாடுகளின் தலைவர்களை நான் தொடர்பு கொண்டு பேசி வருகிறேன்.

பெருந்தொற்று நோயான கொரோனா அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட முன்னேறிய நாடுகளில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அங்கு ஆயிரக்கணக்கானோர் பலியாகி இருக்கிறார்கள்.

கொரோனாவுக்கு எதிராக நீண்ட போரை நாம் தொடங்கி இருக்கிறோம். இந்த போரில் நாம் சோர்வு அடையவோ, தோல்வி அடையவோ கூடாது என்று மக்களை கேட்டுக்கொள்கிறேன். இந்த போரில் நாம் வெற்றி பெற்றே ஆகவேண்டும்.

கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் நாம் அமல்படுத்தி இருக்கும் 21 நாள் ஊரடங்கு இதற்கு முன்பு எப்போதும் நடைபெறாத ஒன்றாகும். இந்த காலகட்டத்தில் மக்கள் மிகுந்த பக்குவத்துடன் நடந்து கொள்கிறார்கள். இந்தியா போன்ற ஒரு மிகப்பெரிய நாட்டில் மக்கள் இப்படி பொறுப்புடனும், கட்டுப்பாட்டுடனும் நடந்து கொள்வது யாராலும் கற்பனை செய்துகூட பார்க்க முடியாதது ஆகும்.

கொரோனாவை ஒழிப்பதில் தங்கள் ஒற்றுமையை காட்டும் வகையில் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் மின்விளக்குகளை அணைத்துவிட்டு அகல்விளக்கு, மெழுகுவர்த்திகளை ஏந்தி நின்றார்கள். செல்போன் டார்ச் லைட்டுகளையும் ஒளிரச் செய்தனர். இது, இந்தியர்களை நீண்ட போருக்கு தயார்படுத்தி இருப்பதையே காட்டுகிறது.

ஏழை, பணக்காரர், படித்தவர், படிக்காதவர், சிறுவர்கள், பெரியவர்கள் என சமுதாயத்தில் உள்ள அனைத்து தரப்பினரும் ஒன்று சேர்ந்து 130 கோடி இந்தியர்களின் ஒட்டுமொத்த வலிமையையும் காட்டி இருக்கிறார்கள். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்த ஒற்றுமை உணர்வு நமக்கு மேலும் பலத்தை அளிக்கும்.

இந்த காலகட்டத்தில் யாரும் பசியால் வாடக்கூடாது. அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் முககவசம் போன்றவை கிடைப்பதை பாரதீய ஜனதா கட்சியினர் உறுதி செய்யவேண்டும்.

கொரோனா ஒழிப்பு தொடர்பாக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் பிரதமரின் நிவாரண நிதிக்கு தொண்டர்கள் நன்கொடை வழங்க வேண்டும். இதேபோல் நன்கொடை வழங்க மற்றவர்களையும் ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் 2 மாதங்களுக்கு பிறகு விமான போக்குவரத்து தொடங்கியது: 630 விமானங்கள் ரத்தானதால் பயணிகள் அவதி
இந்தியாவில் 2 மாதங்களுக்கு பிறகு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நேற்று விமான போக்குவரத்து தொடங்கியது. முதல் நாளிலேயே 630 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் அவதிப்பட்டனர்.
2. கேரளாவில் கைதிகளுக்கு கொரோனா 3 நீதிபதிகள் தனிமைப்படுத்தப்பட்டனர்
கேரளாவில் கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், 3 நீதிபதிகள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
3. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 6,767 பேருக்கு தொற்று உறுதி; கொரோனா பாதிப்பு 1,31,868 ஆக உயர்வு
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 6,767 பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,31,868 ஆக உயர்ந்துள்ளது.
4. இந்தியாவில் சரியான நேரத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது - மத்திய மந்திரி ஹர்ஷவர்தன்
வளர்ந்த நாடுகளைக் காட்டிலும், இந்தியாவில் சரியான நேரத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதாக மத்திய சுகாதாரத் துறை மந்திரி ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
5. தமிழகத்தில் மேலும் 765 பேருக்கு கொரோனா பாதிப்பு - சுகாதாரத்துறை தகவல்
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.