தேசிய செய்திகள்

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு நிதி : சோனியா காந்தி ஐந்து பரிந்துரைகளுடன் பிரதமர் மோடிக்கு கடிதம் + "||" + Coronavirus Outbreak: Sonia Gandhi writes to PM Modi with five suggestions to deal with fund crunch

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு நிதி : சோனியா காந்தி ஐந்து பரிந்துரைகளுடன் பிரதமர் மோடிக்கு கடிதம்

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு நிதி : சோனியா காந்தி ஐந்து பரிந்துரைகளுடன் பிரதமர் மோடிக்கு கடிதம்
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு நிதி நெருக்கடியை சமாளிக்க சோனியா காந்தி ஐந்து பரிந்துரைகளுடன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.
புதுடெல்லி

கொரோனா வைரஸ் பாதிபிற்கு எதிரான போராட்டத்திற்கு நிதி திரட்டுவது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி செவ்வாயன்று பிரதமர் நரேந்திர மோடிக்கு ஐந்து பரிந்துரைகள் அடங்கிய கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.

கடிதத்தில் "நேற்று நீங்கள் பேசும் போது கொரோனா பாதிப்பின்  கடுமையான சவாலை எதிர்கொள்ள எங்கள் கட்சிக்கு ஏதேனும் ஆலோசனைகளை உங்களிடம் தெரிவிக்கும்படி நீங்கள் என்னிடம் கேட்டீர்கள். அந்த மனநிலையில்தான் நான் உங்களுக்கு கடிதம் எழுதுகிறேன்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சம்பளத்தை 30 சதவீதம்  \குறைக்க மத்திய அமைச்சரவை எடுத்த முடிவுக்கு காங்கிரஸ் தலைவர் தனது ஆதரவையும் தெரிவித்துள்ளார்.கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு மிகவும் தேவையான நிதிகளை திரட்ட பயன்படுத்தக்கூடிய சிக்கன நடவடிக்கைகள் காலத்தின் தேவை" என்று அவர் கடிதத்தில் கூறி உள்ளார்

கொரோனா வைரஸ் பாதிப்புக்கான  ஆலோசனைகள் அல்லது பொது சுகாதாரம் தொடர்பான பிரச்சினைகளுக்கு விதிவிலக்குடன் இரண்டு வருட காலத்திற்கு அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களால் ('பி.எஸ்.யு'ஸ்) ஊடக விளம்பரங்கள் - தொலைக்காட்சி, அச்சு மற்றும் ஆன்லைன் விளம்பரங்களுக்கு தடை  விதிக்க வேண்டும்.

"மத்திய அரசு தற்போது ஆண்டுக்கு சராசரியாக ரூ .1250 கோடியை ஊடக விளம்பரங்களுக்காக செலவிடுகிறது (பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் செலவழித்த சமமான அல்லது அதிக தொகை உட்பட), இது பொருளாதார மற்றும் சமூக தாக்கங்களைத் தணிக்க கணிசமான தொகையை திரட்டும். என கூறிஉள்ளார்.

ரூ .20,000 கோடி 'சென்ட்ரல் விஸ்டா' திட்டத்தை நிறுத்திவைக்கக்  சோனியா காந்தி கூறி உள்ளார். "இதுபோன்ற ஒரு நேரத்தில், இதுபோன்ற ஒரு செலவினம் அதிகமாக தோன்றுகிறது. தற்போதுள்ள வரலாற்றுக் கட்டிடங்களுக்குள் பாராளுமன்றம் வசதியாக செயல்பட முடியும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். இந்த நெருக்கடி முடியும் வரை ஒத்திவைக்க முடியாத அவசர அல்லது அழுத்தமான தேவை எதுவும் இல்லை. அதற்கு பதிலாக புதிய மருத்துவமனை உள்கட்டமைப்பு மற்றும் நோயறிதல்களை நிர்மாணிப்பதற்கும், நமது முன்னணி தொழிலாளர்களை தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் ('பிபிஇ') மற்றும் சிறந்த வசதிகளுடன் சித்தப்படுத்துவதற்கும் இந்த தொகை ஒதுக்கலாம் என கூறி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம்- மருத்துவமனை தகவல்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. ”பிரசாதம் இல்லை, புனித தீர்த்தம் இல்லை, பஜனை பாடல்கள் இல்லை” மத வழிபாட்டு தலங்களில் புதிய விதிமுறைகள்
பிரசாதம் இல்லை, புனித தீர்த்தம் இல்லை, பக்திபாடல்கள் இல்லை மத வழிபாட்டு தலங்கள் திறப்பின்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளது.
3. தெலுங்கானாவில் 32 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி
தெலங்கானாவில் உள்ள உஸ்மானிய மருத்துவமனையில் பணிபுரியும் 32 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
4. குறிப்பிட்ட சில மாநிலங்களில் திடீரென அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - அதிர்ச்சி தகவல்கள்
கடந்த வாரம் முதல் வழக்கத்தை விட அதிகமான பாதிப்புகள் கண்டறியப்படுவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
5. தமிழகத்தில் அதிகபட்சமாக ஒரே நாளில் 1384 பேர் கொரோனாவால் பாதிப்பு
தமிழகத்தில் அதிகபட்சமாக ஒரே நாளில் மேலும் புதிதாக ஆயிரத்து 384 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.