தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கை: அரசியல் கட்சிகளின் நாடாளுமன்றக் குழுத் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை + "||" + PM Modi interacts with floor leaders of political parties to discuss coronavirus crisis

கொரோனா தடுப்பு நடவடிக்கை: அரசியல் கட்சிகளின் நாடாளுமன்றக் குழுத் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

கொரோனா தடுப்பு நடவடிக்கை: அரசியல் கட்சிகளின் நாடாளுமன்றக் குழுத் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அரசியல் கட்சிகளின் நாடாளுமன்றக் குழுத் தலைவர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று ஆலோசனை நடத்தினார்.
புதுடெல்லி

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் நடவடிக்கை தொடர்பாக மாநில முதல்வர்கள், அரசு அதிகாரிகள், மருத்துவ துறையினர் என பல தரப்பினருடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் வசதி மூலம் உரையாடி வருகிறார்.

டிவி, பத்திரிகை ஆசிரியர்கள், ரேடியோ ஜாக்கிகளுடனும் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.இதனைத் தொடர்ந்து நாட்டின் முன்னணி சமூக மற்றும் மத அமைப்பினர், உலகம் முழுவதும் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுடன் அவர் உரையாற்றினார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அரசியல் கட்சிகளின் நாடாளுமன்றக் குழுத் தலைவர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம்  இன்று ஆலோசனை நடத்தினார்.

இந்த உரையாடலில் நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் 5 எம்.பி.க்களுக்கு மேல் உள்ள கட்சியின் குழுத் தலைவர்கள் பங்கேற்றனர்.

காங்கிரஸ் சார்பில் குலாம் நபி ஆசாத், திமுக சார்பில் டி.ஆர்.பாலு, திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் சுதீப் பண்டோபாத்யாய், சிவசேனா சார்பில் சஞ்சய் ரவுத், சமாஜ்வாதி சார்பில் ராம் கோபால் யாதவ், பகுஜன் சமாஜ் சார்பில் எஸ்.சி.மிஸ்ரா, லோக் ஜனசக்தி சார்பில் சிராக் பாஸ்வான், தேசியவாத காங்கிரஸ் சார்பில் சரத் பவார் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

கொரோனா பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு மற்றும் ஆலோசனைகளை பிரதமர் மோடி கோரியதாக தெரிகிறது. மேலும் ஊரடங்கு மற்றும் அதுதொடர்பாகவும், பொருளாதார இழப்புகளை சரி செய்வது பற்றியும் அவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசித்தார். தங்கள் கருத்துக்களை அவர்கள் எடுத்துரைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தந்தையை 1200 கிலோமீட்டர் சைக்கிளில் அழைத்து வந்த மகளை பாராட்டிய இவான்கா டிரம்ப்
காயமுற்ற தந்தையை 1200 கிலோமீட்டர் சைக்கிளில் அழைத்து வந்த மகளை அழகிய சாதனை என இவான்கா டிரம்ப் பாராட்டி உள்ளார்
2. உத்திரபிரதேசத்துக்கு பதிலாக ஒடிசாவுக்குச் சென்ற புலம் பெயர்ந்த தொழிலாளர்கள சிறப்பு ரெயில்
உத்திரபிரதேசத்துக்கு பதிலாக ஒடிசாவுக்குச் சென்ற புலம் பெயர்ந்த தொழிலாளர்கள சிறப்பு ரெயில். பரிதவிக்கும் தொழிலாளர்கள்.
3. புதுச்சேரியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கிறது.
4. உலகளாவிய நோய்த்தடுப்பு முறைக்கு இடையூறு கொரோனா தடுப்பூசிகளை தாமதப்படுத்தலாம்
உலகளாவிய நோய்த்தடுப்பு முறைக்கு ஏற்பட்டுள்ள இடையூறு கொரோனா தடுப்பூசிகளை தாமதப்படுத்தலாம் என கூறப்படுகிறது.
5. இந்தியாவில் ஒரே நாளில் 1.15 லட்சம் கொரோனா பரிசோதனைகள்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் சோதிக்கப்பட்ட கொரோனா மாதிரிகளின் எண்ணிக்கை 1,15,364 ஆகும்.