உலக செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் : வேட்பாளருக்கான போட்டியிலிருந்து விலகினார் பெர்னி சாண்டர்ஸ் + "||" + Bernie Sanders drops out of US presidential race, clears way for Joe Biden to Democratic nomination

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் : வேட்பாளருக்கான போட்டியிலிருந்து விலகினார் பெர்னி சாண்டர்ஸ்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் : வேட்பாளருக்கான போட்டியிலிருந்து விலகினார் பெர்னி சாண்டர்ஸ்
ஜோ பிடனுக்கு வழிவிட்டு 2020 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளருக்கான போட்டியிலிருந்து விலகினார் பெர்னி சாண்டர்ஸ்
வாஷிங்டன்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடப்போகும் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் இருந்து பெர்னி சாண்டர்ஸ் விலகியுள்ளார்.

அமெரிக்காவில் வருகிற நவம்பர் 3 ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் தற்போது ஜனாதிபதியாக இருக்கும் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடப்போகும் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தற்போது நடந்து வருகிறது. இதில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனுக்கும், செனட் சபை எம்.பி. பெர்னி சாண்டர்சுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வந்தது.

இதுவரை நடைபெற்ற தேர்தல்கள் முடிவில் பெர்னி சாண்டர்ஸ் ஏழு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றார். ஆனால் பிடன் 19 இடங்களில் வெற்றி பெற்றார். இதனால் தனது பரப்புரையை ரத்து செய்த பெர்னி சாண்டர்ஸ், ஜனாதிபதி வேட்பாளர் தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

ஜோ பிடனுக்கு வழிவிட்டு 2020 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளருக்கான போட்டியிலிருந்து விலகினார் பெர்னி சாண்டர்ஸ் இதனால் ஜனாதிபதி தேர்தலில் டொனால்டு டிரம்புக்கும்- ஜோ பிடனுக்கும் போட்டி உறுதியாகி உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்க ஜனாதிபதியின் வெள்ளை மாளிகை அதிகாரிகளுக்கு கொரோனா
அமெரிக்க ஜனாதிபதியின் வெள்ளை மாளிகை அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் பாதித்துள்ளது.
2. அமெரிக்க பொருளாதாரத்தை மீண்டும் மீட்டெடுக்க அதிக உயிர் இழப்பு ஏற்படும்- டொனால்டு டிரம்ப்
அமெரிக்க பொருளாதாரத்தை மீண்டும் மீட்டெடுக்க அதிக உயிர் இழப்பு ஏற்படும் என்று ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறினார்.
3. அயர்லாந்து பிரதமருக்கு இந்திய முறையில் வணக்கம் தெரிவித்த டிரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அயர்லாந்து பிரதமருடனான சந்திப்பின் போது, கை குலுக்குவதை தவிர்த்து வணக்கம் போட்டுள்ளார்.
4. இந்திய ஆடை வடிவமைப்பாளர்கள் கைவண்ணத்தில் ஜொலித்த இவான்கா டிரம்ப்
இந்திய பயணத்தின் போது இந்திய ஆடை வடிவமைப்பாளர்கள் கைவண்ணத்தில் இவான்கா டிரம்ப் ஜொலித்தார்
5. இறைச்சி உணவுப்பிரியரான அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் தினசரி உணவுப் பட்டியல்
இறைச்சி உணவுப்பிரியரான அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் தினசரி உணவு பழக்கவழக்கங்கள் குறித்து விவரம் வருமாறு