உலக செய்திகள்

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் குணமடைந்து வீடு திரும்பினார் - டாக்டர்களுக்கு வாழ்வெல்லாம் கடன்பட்டிருப்பதாக நெகிழ்ச்சி + "||" + UK Prime Minister Boris Johnson recovers and returns home - Elasticity of indebtedness to doctors

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் குணமடைந்து வீடு திரும்பினார் - டாக்டர்களுக்கு வாழ்வெல்லாம் கடன்பட்டிருப்பதாக நெகிழ்ச்சி

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் குணமடைந்து வீடு திரும்பினார் - டாக்டர்களுக்கு வாழ்வெல்லாம் கடன்பட்டிருப்பதாக நெகிழ்ச்சி
கொரோனா வைரஸ் தாக்கி, லண்டன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் குணமடைந்து வீடு திரும்பினார்.
லண்டன், 

55 வயதான இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், கொரோனா வைரஸ் பிடியில் சிக்கி, லண்டன் டவுனிங் வீதியில் உள்ள பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் தனிமைப் படுத்திக் கொண்ட நிலையில், நோயின் தாக்கம் தீவிரமானது. இதையடுத்து கடந்த 5-ந் தேதி லண்டன் செயிண்ட் தாமஸ் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

அங்கு அவரது உடல்நிலை மோசமானதால், மறுநாள் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு மருத்துவர்கள் இரவு, பகலாக அளித்த சிகிச்சையின் மூலம் அவரது உடல்நிலை தேறியது. அதன் பின்னர் அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். இந்தநிலையில் மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் போரிஸ் ஜான்சன் கொரோனாவில் இருந்து பூரண குணமடைந்தார்.

இதையடுத்து நேற்று அவர் வீடு திரும்பினார். எனினும் மருத்துவர்களின் ஆலோசனையின்படி அவர் உடனடியாக பணிக்கு திரும்ப மாட்டார் என்று அவரது செய்தி தொடர்பாளர் கூறினார். தற்போது பிரதமர் பொறுப்பை அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி டொமினிக் ராப் கவனித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக போரிஸ் ஜான்சன் தனக்கு சிகிச்சை அளித்த தேசிய சுகாதார பணிகள் துறை டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ சார்பு பணியாளர்கள் என அனைவருக்கும், தன்னை கொரோனா வைரசின் தீவிர பிடியில் இருந்து மீட்டுக் கொண்டு வந்ததற்காக மனமார்ந்த நன்றி தெரிவித்தார்.

இதையொட்டி அவர் கூறுகையில், “நான் அவர்களுக்கு வெறுமனே நன்றி கூறி விட முடியாது. என் வாழ்வெல்லாம் நான் அவர்களுக்கு கடன்பட்டிருக்கிறேன்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். மேலும், தனது எண்ணங்கள் அனைத்தும், இந்த கொடிய வைரசால் பாதிக்கப்பட்டவர்களுடன்தான் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா வைரஸ் தாக்குதல்: என் மரணத்தை அறிவிக்கவும் டாக்டர்கள் தயாராக இருந்தனர் - போரிஸ் ஜான்சன் உருக்கமான பேட்டி
கொரோனா வைரஸ் தாக்கியதில் மரணத்தின் விளிம்பு வரை போய் உயிர் பிழைத்தது பற்றி இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார்.என் மரணத்தை அறிவிக்கவும் டாக்டர்கள் தயாராக இருந்தனர் என்று அப்போது அவர் கூறினார்.
2. இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு ஆண் குழந்தை பிறந்தது
கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
3. இங்கிலாந்து பிரதமர் வீட்டின் எதிரே இந்திய கர்ப்பிணி டாக்டர் போராட்டம்
கொரோனா வைரஸ் சிகிச்சையின்போது டாக்டர்கள் அணிந்துகொள்ள வேண்டிய சுய பாதுகாப்பு சாதனங்கள் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி, இங்கிலாந்து பிரதமர் இல்லத்தின் வெளியே இந்திய கர்ப்பிணி டாக்டர் போராட்டம் நடத்தினார்.
4. இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், அரசு பொறுப்பை கவனிக்க தொடங்கினார்
கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், அரசு பொறுப்பை கவனிக்க தொடங்கினார்.
5. உடல்நிலை தேறி வருவதால் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து போரிஸ் ஜான்சன் வார்டுக்கு மாற்றம்
கொரோனாவால் பாதிக்கப்பட்ட போரிஸ் ஜான்சன் உடல்நிலை தேறி வருவதால், அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வார்டுக்கு மாற்றப்பட்டார்.