மாநில செய்திகள்

கொரோனா பாதிப்பு; உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி வழங்க வேண்டும்; திமுக தோழமைகட்சி கூட்டத்தில் தீர்மானம் + "||" + Corona damage; To the families of the survivors Rs 1 crore each Resolution of DMK Companion Party Meeting

கொரோனா பாதிப்பு; உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி வழங்க வேண்டும்; திமுக தோழமைகட்சி கூட்டத்தில் தீர்மானம்

கொரோனா பாதிப்பு; உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி வழங்க வேண்டும்; திமுக தோழமைகட்சி கூட்டத்தில் தீர்மானம்
திமுக தலைமையில் நடைபெற்ற தோழமைக் கட்சி கூட்டத்தில் கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி வழங்க வேண்டும் என்பது உள்பட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
சென்னை

கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகள் தொடர்பாக தோழமைக் கட்சி தலைவர்கள் 11 பேருடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக ஆலோசனை நடத்தினார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசின் செயல்பாடுகள் எந்த அளவுக்கு உள்ளன என்பது குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் கி.வீரமணி, வைகோ, ஈஸ்வரன், திருமாவளவன், கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், காதர் மொய்தீன், ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெறுவதாக இருந்த இந்த கூட்டம், காவல்துறையின் அனுமதி மறுப்பால் இன்று காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது.

கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் உயிரிழப்பிற்கு வழங்கப்படும் ரூ.10 லட்சம் நிவாரணம் போதாது.கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி வழங்க வேண்டும். தடுப்பு பணியாளர்கள் உயிரிழந்தால் குடும்பத்திற்கு ரூ.1கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்பட திமுக தலைமையில் நடைபெற்ற தோழமைக் கட்சி கூட்டத்தில் 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனையில் பங்கேற்கும் முதல் நபர்
மேற்கு வங்காளத்தின் துர்காபூரைச் சேர்ந்த 30 வயதான ஆசிரியர் சிரஞ்சித் திபார் கொரோனா வைரஸ் தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனையில் பங்கேற்கும் முதல் நபரானார்.
2. கொரோனா சிகிச்சை அளிக்கும் கவச உடையில் பெண் டாக்டர் ஒருவர் நடனமாடும் வீடியோ
கொரோனா சிகிச்சை அளிக்கும் கவச உடையில் பெண் டாக்டர் ஒருவர் நடனமாடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
3. 6 மாதங்களாக உலகை ஆட்டுவிக்கும் கொரோனா வைரசை சுற்றி விலகாத 5 மர்மங்கள்
6 மாதங்களாக உலகை ஆட்டுவிக்கும் கொரோனா வைரசை சுற்றி இன்று கண்டுபிட்க்கமுடியாத 5 க்கும் மேற்பட்ட மர்மங்கள் உள்ளதாக விஞ்ஞான இதழான நேச்சர் கூறி உள்ளது.
4. "காற்று வழியாக பரவும் கொரோனா" ஒப்புகொண்ட உலக சுகாதாரா அமைப்பு
கொரோனா வைரஸ் காற்று மூலம் பரவலுக்கான ஆதாரங்களை உலக சுகாதார அமைப்பு ஒப்புக் கொண்டு உள்ளது,
5. 21 நாட்களில் கொரோனா வைரஸை வென்றுவிடலாம் என்றார், 100 நாட்களைக் கடந்து விட்டது பிரதமருக்கு சிவசேனா கேள்வி
21 நாட்களில் கொரோனா வைரஸை வென்றுவிடலாம் என்று பிரதமர் மோடி கூறினார். ஆனால், 100 நாட்களைக் கடந்து கொரோனா வைரஸ் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருவது ஏன் என்று பிரதமர் மோடிக்கு சிவசேனா கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.