உலக செய்திகள்

காஷ்மீரில் தாக்குதல் நடத்த தலிபான்களிடம் பயிற்சி பெறும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் + "||" + Afghan forces intercept Taliban fighters, find Jaish terrorists training for Kashmir

காஷ்மீரில் தாக்குதல் நடத்த தலிபான்களிடம் பயிற்சி பெறும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள்

காஷ்மீரில் தாக்குதல் நடத்த தலிபான்களிடம் பயிற்சி பெறும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள்
காஷ்மீரில் தாக்குதல் நடத்த தலிபான்களிடம் பயிற்சி பெறும் 10 ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் சுட்டுக்கொலை
காபூல்

ஆப்கானிஸ்தான் படைகள் நங்கர்ஹரின் முஹ்மத் தாராவில் தலிபான் முகாம் இருப்பதாக என்று கருதப்பட்ட இடத்தில் ஒரு சோதனையை நடத்தினர். அப்போது இருதரப்புக்கும் இடையே  துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் 15 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 4 ஆப்கானிஸ்தான் படை வீரர்கள் பலியானார்கள்.

கொல்லப்பட்ட 15 பயங்கரவாதிகளில் 5 பேர் மட்டுமே ஆப்கானிஸ்தான் தலிபானைச் சேர்ந்தவர்கள் என்று பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்தனர். மற்றவர்கள் ஜம்மு-காஷ்மீரில் தாக்குதல் நடத்த பயிற்சி பெற்ற ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் ஆவார்கள்.

இந்துஸ்தான் டைம்ஸ் இந்த மோதலின் புகைப்படங்களையும் வீடியோ காட்சிகளையும் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படங்களில் ஒன்று, முகாமில் இருந்து ஆப்கானிய பாதுகாப்பு படையினரால் கைப்பற்றப்பட்ட சில ஆயுதங்களைக் காட்டுகிறது: 2 மோட்டார் ஏவுகணைகள்,  ராக்கெட் மூலம் இயக்கப்படும் எறிகுண்டுகள் மற்றும் 2 இயந்திர துப்பாக்கிகள் உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து மீண்டும் வழங்கப்படாது- மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்
மெகபூபா முப்தி தேசியக் கொடியை அவமதித்ததாக மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் குற்றம் சாட்டினார்.
2. தேசியக் கொடி மெகபூபா கருத்து: பிரிவினைவாதிகளை விட காஷ்மீர் அரசியல்வாதிகள் மோசமானவர்கள் - மத்திய அமைச்சர்
மெகபூபா முப்தியின் தேசியக் கொடி குறித்த கருத்துக்கு பிரிவினைவாதிகளை விட காஷ்மீர் அரசியல்வாதிகள் மோசமானவர்கள் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறி உள்ளார்.
3. காஷ்மீரில் இரண்டு பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் முன் சரணடைந்தனர்
காஷ்மீரில் இரண்டு பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் முன் நேற்று சரணடைந்தனர். தங்கள் பெற்றோர்கள் அதிகாரிகளிடம் முறையிட்டதை தொடர்ந்து தங்கள் ஆயுதங்களை கீழே போட்டு சரணடைய ஒப்புக்கொண்டனர்.
4. காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரியின் சேதமடைந்த கல்லறையை சீரமைத்த இந்திய இராணுவம்
ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரியின் சேதமடைந்த கல்லறையை இந்திய இராணுவம் சீரமைத்து உள்ளது.
5. ஜம்மு காஷ்மீரில் இந்துக்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டம்
பண்டிகை காலங்களில் ஜம்மு காஷ்மீரில் இந்துக்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது என உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.