உலக செய்திகள்

ஜப்பானில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் + "||" + Magnitude 6.1 earthquake jolts Miyagi area

ஜப்பானில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
ஜப்பானில் இன்று அதிகாலை 5:30 மணி அளவில், சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
டோக்கியோ

ஐப்பான் நகர் மியாகியில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் பசிபிக் கடற் பரப்பிற்கு அடியில் 41.7 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது 

ஐப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் இந்த நிலநடுக்கத்தை ரிக்டர் அளவு கோலில் 6.1 ஆக கணக்கிட்டுள்ளது.சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், அதிகாலை 5:30 மணிக்கு நிகழ்ந்ததாக தெரிவித்துள்ளது. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று ஜப்பானின் கியோடோ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐப்பானில் இதுபோன்று அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட காரணம் அந்நாடு பசிபிக் ரிங் ஆப் பயர் பகுதியில் அமைந்துள்ளது. எனவே இதுபோன்ற நிகழ்வு அடிக்கடி ஏற்படுகிறது.

மியாகி மாகாணத்தில் 2011ஆம் ஆண்டு 130 கிலோமீட்டர் தொலைவில் 9.0  ரிக்டர் அளவில்சக்தி வாய்ந்த  நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது பெரிய சுனாமி உருவாகி புகுஷிமா அணு உலையை சேதப்படுத்தியது. இதில், கிட்டத்தட்ட 16,000பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. 15 நிமிடத்தில் 4 முறை தாக்கியது -ஜப்பானில் அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம்
அடுத்தடுத்து 4 சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டபோதிலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
2. ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் உள்ள இபராகி பிராந்தியத்தில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
3. உடல் நலப்பிரச்சினை: ஜப்பான் பிரதமர் அபே இன்று ராஜினாமா...?
உடல் நலப்பிரச்சினை காரணமாக ஜப்பான் பிரதமர் அபே இன்று ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
4. மிசோரத்தில் மிதமான நில நடுக்கம்
ரிக்டர் அளவில் 3.8 கொண்ட பூகம்பம் மிசோரத்தைத் தாக்கியது
5. ஜப்பானில் மழை வெள்ளத்துக்கு பலியானோரின் எண்ணிக்கை 60 ஆக அதிகரிப்பு
ஜப்பானின் தெற்கு மாகாணங்களில் மழை வெள்ளத்துக்கு பலியானோரின் எண்ணிக்கை தற்போது 60 ஆக அதிகரித்துள்ளது