உலக செய்திகள்

அறைகளில் உள்ள கொரோனா வைரஸ்களை அழித்து சுத்தம் செய்ய நாசா புதிய கருவி கண்டுபிடிப்பு + "||" + NASA SCIENTISTS HAVE DEVELOPED ROOM-STERILIZATION MACHINE AND NEW VENTILATOR TO FIGHT CORONAVIRUS

அறைகளில் உள்ள கொரோனா வைரஸ்களை அழித்து சுத்தம் செய்ய நாசா புதிய கருவி கண்டுபிடிப்பு

அறைகளில் உள்ள கொரோனா வைரஸ்களை அழித்து சுத்தம் செய்ய நாசா புதிய கருவி கண்டுபிடிப்பு
அறைகளில் உள்ள கொரோனா வைரஸ்களை அழித்து சுத்தம் செய்ய புதிய கருவியை நாசா அறிமுகப்படுத்தியுள்ளது.
வாஷிங்டன்

ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் புள்ளிவிவரப்படி  அமெரிக்காவில் வெள்ளிக்கிழமை 1,258 கொரோனா வைரஸ் இறப்புகள் பதிவாகியுள்ளன, இது கிட்டத்தட்ட மூன்று வாரங்களில் நாட்டின் மிகக் குறைந்த தினசரி எண்ணிக்கை. இதுவரை, மொத்த இறப்பு எண்ணிக்கை 51,016 ஆக உள்ளது.  கடந்த 10 நாட்களில் இறப்பு எண்ணிக்கை 2  மடங்காக அதிகரித்து உள்ளது. 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நாசா மற்றும் ஜெட் ப்ராபல்ஷன் லேபரேட்டரி (ஜேபிஎல்) அதிகாரிகளைச் சந்தித்து உரையாற்றினார். அப்போது அவர்கள் வடிவமைத்த சில கருவிகளை பார்வையிட்டார். கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் அதை பயன்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்த கருவிகளில் ஒரு வென்டிலேட்டர்,மருத்துவமனிகளில்  பயன்படுத்தக்கூடிய ஒரு தூய்மைப்படுத்தும் கருவி மற்றும் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு குறிப்பாக வடிவமைக்கப்பட்ட ஆக்ஸிஜன் ஹூட் ஆகியவை அடங்கும்.

கிருமி நீக்கம் செய்து அறைகளை சுத்தம் செய்யப் பயன்படும் அம்புஸாட் (AMBUStat) என்ற கருவியை இடம் பெற்றது. இதனை முதலில் பள்ளிகள், சிறைச்சாலைகள் போன்ற பொதுவான இடங்களுக்கு பயன்படுத்தலாம் என்றும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த கருவிகளைக் கொண்டு மிக எளிதாக கிருமி நீக்கம் செய்யலாம் என நாசா அமைப்பின் தலைவர் ஜிம் பிரிடென்ஸ்டைன் கூறியுள்ளார்.

கிருமிநீக்கம் செய்ய வேண்டிய அறைக்குள் இந்தக் கருவியை வைத்தால் அதிலிருந்து வெளிவரும் பனிமூட்டம் போன்ற புகை அங்குள்ள அத்தனை கிருமிகளையும் அழித்து விடும்.செயல்முறை முடிந்ததும், அந்த பகுதி சுத்தமாக இருக்கிறது, மேலும் துடைக்க தேவையில்லை.

"இப்போது நாங்கள் அதை எடுத்து முழு அறைகளையும் சுத்தம் செய்ய பயன்படுத்த விரும்புகிறோம், இதனால் பள்ளிகள் திறக்கப்படலாம் மற்றும் வணிகங்கள் திறக்கப்படலாம்" என்று பிரிடென்ஸ்டைன் கூறினார்.
என்று ஜிம் பிரிடென்ஸ்டைன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. சூரியனை சுற்றும் சிறுகோளில் மாதிரியை கைப்பற்றி நாசா விண்கலம் வரலாற்று சாதனை
11 அடி நீளமுடைய ரோபோ கை மூலமாக பென்னுவின் வட துருவ கற்களின் மாதிரியை கைப்பற்றியவிண்கலம்.இதன் மூலம் எதிர்காலத்தில் அறிவியலில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழிபிறக்கும் என்று கருதப்படுகிறது.
2. சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் அடுத்த நகர்வாகா அதன் ஊடகங்களை தன்வசப்படுத்த திட்டம்
சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் அடுத்த நகர்வாக சீனாவின் அச்சு ஊடகங்களை தன்வசப்படுத்த திட்டமிட்டு உள்ளது.
3. சீனாவுடனான பதற்றத்திற்கு மத்தியில் 100 கோடி டாலர் மதிப்பிலான ஆயுதங்களை தைவானுக்கு அமெரிக்கா விற்பனை
சீனாவுடனான பதற்றத்திற்கு மத்தியில் 100 கோடி டாலர் (ரூ 7329 கோடி) மதிப்பிலான ஆயுதங்களை தைவானுக்கு அமெரிக்கா விற்பனை செய்கிறது.
4. தைவானுடன் வர்த்தகம் செய்ய வேண்டாம் இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை
தைவானுடன் வர்த்தகம் செய்ய வேண்டாம் என்று இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள சீனா தைவானுடன் நெருக்கம் காட்டி வரும் அமெரிக்காவுக்கும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
5. திபெத் விவகாரம்: அமெரிக்காவுக்கு சீனா கடும் எதிர்ப்பு
திபெத் விவகாரங்கள் முற்றிலும் எங்கள் நாட்டின் உள்விவகாரம் என சீனா தெரிவித்துள்ளது.