உலக செய்திகள்

கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து இந்தியாவுக்கு அடுத்த ஆபத்து + "||" + Bad to worse: Looming locust attack amid coronavirus panic

கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து இந்தியாவுக்கு அடுத்த ஆபத்து

கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து இந்தியாவுக்கு அடுத்த ஆபத்து
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு இந்தியா போராடி வரும் நிலையில், வெட்டுக்கிளிகளால் அந்நாடு மிகப் பெரிய பாதிப்பை சந்திக்கும் என்று ஐ.நா எச்சரித்துள்ளது.
ஜெனீவா

இந்தியாவில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நீடித்து வருகிறது. இதனால் 3-ஆம் தேதி வரை இருக்கும் ஊரடங்கு உத்தரவை வரும் 18-ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டிப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில்,அடுத்த இரண்டு மாதங்களில் இந்தியாவில் உள்ள விளை நிலங்களை மிகப்பெரிய அளவிலான வெட்டுக்கிளிகள் ம் கூட்டம் கூட்டமாக தாக்கக் கூடும் என்று ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதில், ஆப்ரிக்காவில் இருந்து கிளம்பும் வெட்டுக்கிளிகள் பாலைவன வெட்டுக்கிளிகளுடன் இணைந்து ஏமன், ஈரான், சவுதி அரேபியா, பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு வந்தடையும் என்றும், அதன் பின் இந்தியாவின் பஞ்சாப், அரியானா ஆகிய மாநிலங்களில் உள்ள விளை நிலங்கள் வெட்டுக்கிளிகளால் கடுமையாக பாதிக்கும் நிலை உருவாகும் என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இந்தியாவை வெட்டுக்கிளிகள் தாக்கும்போது உணவு உற்பத்தியில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் இந்தியாவின் வேளாண்மை கடுமையாக பாதிக்கப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.ஒரு சதுரகிலோ மீட்டர் பரப்பளவில் சுமார் 4 கோடி வெட்டுக்கிளிகள் இருக்கும். தினமும் 35 ஆயிரம் பேருக்கான உணவு தானியங்களை வெட்டுக்கிளிகள் அழித்து விடும் என்றும் ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிட்த்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. பெங்களூருவில் 2 மணி நேரமாக தெருவோரம் வைக்கப்பட்டிருந்த கொரோனாவால் உயிரிழந்தவரின் சடலம்
கொரோனா பாதிக்கப்பட்டவர் ஒருவர் வீட்டிலையே உயிரிழந்ததை தொடர்ந்து, உடலை தெருவோரம் வைத்தபடி 2 மணி நேரமாக அந்த குடும்பத்தினர் அம்புலன்ஸூக்கு காத்திருந்துள்ளனர்.
2. கொரோனாவை தடுக்க அனைவருக்கும் முக கவசம் அவசியம்: சொல்வது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்
கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுத்து உயிரைக்காப்பாற்றிக்கொள்வதில் முக கவசம், உயிர் கவசமாக மாறி இருக்கிறது
3. சீனாவில் இருந்து வந்த ”பிளேக்”: கொரோனா குறித்து டிரம்ப் மீண்டும் விமர்சனம்
சீனாவில் இருந்து வந்த பிளேக் நோய்தான் கொரொனா வைரஸ் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் சாடியுள்ளார்.
4. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.09 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.09 கோடியாக உயர்ந்துள்ளது.
5. கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு பருத்தி துணியில் வீட்டில் தயாரிக்கும் முக கவசம் நல்லது - விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு பருத்தி துணியைக்கொண்டு வீட்டில் தயாரிக்கிற முக கவசம் நல்லது என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.