தேசிய செய்திகள்

இரட்டை இலை சின்னம் வழக்கு; சசிகலா சீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி + "||" + Double leaf symbol case; Supreme Court dismisses Sasikala arraignment petition

இரட்டை இலை சின்னம் வழக்கு; சசிகலா சீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

இரட்டை இலை சின்னம் வழக்கு; சசிகலா சீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
இரட்டை இலை சின்னத்தை அ.தி.மு.க.வுக்கு ஒதுக்கீடு செய்தது தொடர்பாக வி.கே.சசிகலா தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
புதுடெல்லி, 

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் சசிகலா சார்பில் தாக்கல் செய்த சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையிலான ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த தீர்ப்புக்கு எதிராக டி.டி.வி.தினகரன் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் டெல்லி ஐகோர்ட்டின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து விட்டனர். அதனைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவை சீராய்வு செய்யக்கோரியும், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்கவும் வி.கே.சசிகலா தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில் “கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை மாற்றுவதற்கு அடிப்படை அதிகாரம் யாருக்கும் கிடையாது. இந்த அம்சத்தை தேர்தல் கமிஷனும், டெல்லி ஐகோர்ட்டும் தங்கள் தீர்ப்பில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளவில்லை. சுப்ரீம் கோர்ட்டிலும் இந்த விஷயங்கள் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் பரிசீலனைக்கு எடுக்கவில்லை. எனவே, இரட்டை இலை தொடர்பான டெல்லி ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொண்டு சுப்ரீம் கோர்ட்டு இது தொடர்பாக பிறப்பித்த உத்தரவை மறுசீராய்வு செய்ய வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.

இந்த சீராய்வு மனுவை நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, தீபக் குப்தா, சஞ்சீவ் கன்னா ஆகியோர் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டு விசாரித்தனர். அதனைத் தொடர்ந்து, “வழக்கு தொடர்பான ஆவணங்களை பரிசீலனை செய்ததன் அடிப்படையில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பில் தவறு எதுவும் இல்லை என்பதால் இந்த மனுவை சீராய்வு செய்ய முகாந்திரம் ஏதும் இல்லை” என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டாலும், மீண்டும் சுப்ரீம் கோர்ட்டை அணுக உள்ளதாக சசிகலா தரப்பு வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் கூறினார். ‘சீராய்வு மனு தள்ளுபடி செய்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் குறை நிவர்த்தி மனுவை சசிகலா தரப்பில் தாக்கல் செய்யப்படும். இந்த மனுவை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும். அப்போது எங்கள் தரப்பின் நியாயத்தை மீண்டும் ஒரு முறை எடுத்துரைக்க வாய்ப்பு கிடைக்கும்’ என்று அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. அர்ச்சகர்கள், ஓதுவார்களுக்கு தலா ரூ.15 ஆயிரம் வழங்கக்கோரி வழக்கு - அறநிலையத்துறை பதில் அளிக்க, ஐகோர்ட்டு உத்தரவு
தமிழகத்தில் கோவில்கள் மூடப்பட்டுள்ளதால், அர்ச்சகர்கள், ஓதுவார்கள் உள்ளிட்டோருக்கு மாதந்தோறும் தலா ரூ.15 ஆயிரம் வழங்க கோரி ‘தினமலர்’ வெளியீட்டாளர் ஆர்.ஆர்.கோபால்ஜி தொடர்ந்த வழக்கிற்கு 2 வாரத்துக்குள் பதில் அளிக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
2. அதிமுக - டிடிவி தினகரனின் அமமுகவை இணைக்கும் முயற்சி : பா. ஜனதா மறுப்பு
அதிமுக மற்றும் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகியவற்றை ஒன்றிணைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுவதை பா. ஜனதா மறுத்து உள்ளது.
3. பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆவதில் சிக்கல்? - புதிய தகவல்
பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது.
4. சசிகலா ஆகஸ்ட் 14 ந்தேதி விடுதலை; சிறைத்துறை அதிகாரிகள் மறுப்பு
சசிகலா ஆகஸ்ட் 14 ந்தேதி விடுதலையாவார் என்பதை சிறைத்துறை அதிகாரிகள் மறுத்து உள்ளனர்.
5. 5 நாட்கள் விசாரிக்க கோர்ட்டு அனுமதி: கூட்டாளியுடன் காசியை காவலில் எடுத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தொடங்கினர்
காசி, அவரது கூட்டாளியை 5 நாட்கள் காவலில் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு கோர்ட்டு அனுமதி வழங்கியது.