உலக செய்திகள்

வட கொரிய தலைவருடன் டெலிபோனில் உரையாடுவேன் - டொனால்டு டிரம்ப் + "||" + Trump Says He May Talk to Kim Jong Un This Weekend

வட கொரிய தலைவருடன் டெலிபோனில் உரையாடுவேன் - டொனால்டு டிரம்ப்

வட கொரிய தலைவருடன் டெலிபோனில் உரையாடுவேன் - டொனால்டு டிரம்ப்
இந்த வார இறுதியில் வட கொரிய தலைவருடன் டெலிபோனில் உரையாடுவேன் என டொனால்டு டிரம்ப் கூறினார்.
வாஷிங்டன்

வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதிக்கு பின் பொது வெளியில் தென்படாததால், அவர் இறந்துவிட்டதாகவும், இதய அறுவை சிகிச்சை காரணமாக அவரால் எழுந்து கூட நடக்க முடியாத நிலையில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

20 நாட்களுக்கு பிறகு வட கொரிய அரசு ஊடகங்கள் சனிக்கிழமையன்று கிம் ஜாங் உன் கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சி தொடர்பான செய்திகள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டது.இதை தொடர்ந்து  இந்த வார இறுதியில் கிம் ஜாங் உனுடன் தான் டெலிபோனில் பேசப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறினார்.

வெள்ளைமாளிகையில் அளித்த பேட்டியின் போது டொனால்டு  டிரம்ப் கூறியதாவது:-

சரியான நேரத்தில் நான் வடகொரிய தலைவரிடம் பேசுவேன். இந்த வார இறுதியில் சில வெளிநாட்டு தலைவர்களுடன் சந்திப்பு மற்றும் டெலிபோன் உரையாடலை நடத்த உள்ளேன். என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியா-சீனாவிற்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றங்கள்; உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம் -அமெரிக்கா
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே அதிகரித்து வரும் எல்லை பதற்றங்கள் மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பாக உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம் என அமெரிக்கா கூறி உள்ளது.
2. 59 சீன மொபைல் செயலிகளுக்கு தடை அமெரிக்கா ஆதரவு
59 சீன செயலிகளுக்கு தடை அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது
3. அமெரிக்காவின் ‘ஜி.பி.எஸ்.3’ செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது
அமெரிக்காவின் 3வது ‘ஜி.பி.எஸ்.3’ செயற்கைக்கோள் நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
4. ஹாங்காங்கிற்கான பாதுகாப்பு உபகரணங்கள் ஏற்றுமதியை முடிவுக்கு கொண்டுவரும் அமெரிக்கா
ஹாங்காங்கிற்கான பாதுகாப்பு உபகரணங்கள் ஏற்றுமதியை அமெரிக்கா முடிவுக்குக் கொண்டுவருகிறது என வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ தெரிவித்து உள்ளார்.
5. அமெரிக்காவில் மேலும் 44,698 பேருக்கு கொரோனா தொற்று
அமெரிக்காவில் புதிதாக 44,698 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.