மாநில செய்திகள்

டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலை ரூ.20 வரை உயரும்; தமிழக அரசு அறிவிப்பு + "||" + The price of alcoholic beverages in Tasmanian stores goes up to Rs.20; govt announced

டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலை ரூ.20 வரை உயரும்; தமிழக அரசு அறிவிப்பு

டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலை ரூ.20 வரை உயரும்; தமிழக அரசு அறிவிப்பு
டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலையை ரூ.20 வரை உயர்த்தி தமிழக அரசு அறிவித்து உள்ளது.
சென்னை,

தமிழகத்தில் கொரோனா பரவல் நாள்தோறும் தீவிரமடைந்து வருகிறது.  இதனால் 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் உள்ளன.  ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், நேற்று முன்தினம் முதல் பல்வேறு இடங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.  இதன்பின்னர் தமிழகத்தில் மே 7ந்தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியானது.

சென்னையில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு உள்ள சூழ்நிலையில், சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட நகரங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது.  இதுபற்றிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்து உள்ளது.  இதேபோன்று கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளிலும் மதுபான விற்பனை நடைபெறாது என அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவுள்ள நிலையில், மதுபானங்களின் விலையை உயர்த்தி தமிழக அரசு அறிவித்து உள்ளது.  தமிழக அரசு ஆயத்தீர்வை வரியை 15 சதவீதம் அளவுக்கு உயர்த்தி உள்ளது.  இதனால் மதுபானங்களின் விலை உயர்வு டாஸ்மாக் கடைகளில் நாளை முதல் அமலுக்கு வருகிறது.

இந்த விலை உயர்வு இந்திய தயாரிப்பு வெளிநாட்டு மதுபானங்கள் மீதும் விதிக்கப்படும்.  இதனால் சாதாரண வகை 180 மி.லி. மதுபான பாட்டிலின் அதிகபட்ச சில்லறை விற்பனை ரூ.10 வரை உயரும்.  நடுத்தர மற்றும் பிரீமியம் வகை மதுபான பாட்டிலின் அதிகபட்ச சில்லறை விற்பனை ரூ.20 உயரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அரசுக்கு கடந்த 2019-2020ம் நிதியாண்டில் டாஸ்மாக் வழியே ரூ.31 ஆயிரத்து 157 கோடி அளவுக்கு வருவாய் கிடைத்தது.  டெல்லி, கர்நாடகாவை தொடர்ந்து தமிழகத்திலும் மதுபான விலை உயர்வு அமலுக்கு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை நினைவு இல்லம் ஆக்கும் பணி தீவிரம்; தமிழக அரசு அறிவிப்பு
தமிழக முன்னாள் முதல் அமைச்சர் மறைந்த ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை நினைவு இல்லம் ஆக்கும் பணியை தமிழக அரசு தீவிரப்படுத்தி உள்ளது.
2. 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து - தமிழக அரசு அதிரடி
5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை