மாநில செய்திகள்

நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறப்பு - பாதுகாப்பு விவரங்கள் வெளியீடு + "||" + Opening of the first Task Shop tomorrow

நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறப்பு - பாதுகாப்பு விவரங்கள் வெளியீடு

நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறப்பு -  பாதுகாப்பு விவரங்கள் வெளியீடு
நாளை முதல் டாஸ்மாக் கடைகள் தொடங்க உள்ள நிலையில் பாதுகாப்பு விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
சென்னை,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் நாள்தோறும் தீவிரமடைந்து வருகிறது.  இதனால் 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் உள்ளன.  ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், நேற்று முன்தினம் முதல் பல்வேறு இடங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.  இதன்பின்னர் தமிழகத்தில் மே 7ந்தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியானது.

சென்னையில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு உள்ள சூழ்நிலையில், சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட நகரங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது.  இதேபோன்று, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளிலும் மதுபான விற்பனை நடைபெறாது என தமிழக அரசு தெரிவித்தது.

தொடர்ந்து தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவுள்ள நிலையில் அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தநிலையில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் தொடங்க உள்ள நிலையில் பாதுகாப்பு விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

* ஒவ்வொரு கடைக்கும் தலா 2 காவலர்கள், 2 ஊர்க்காவல் படையினர், 1 தன்னார்வலர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 

* ஒவ்வொருவருக்கும் இடையே 6 அடி இடைவெளியை உறுதி செய்ய வேண்டும்.

* மதுபானம் வைத்திருக்கும் திருமண மண்டபங்களில் 4 காவலர்கள் , 4 ஊர் காவல் படையினர் இருக்க வேண்டும். பாதுகாப்பு நெறிமுறைகளை சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.

* ஒவ்வொரு ஊராட்சிக்கும் 2 பறக்கும் படை , நகர்ப் பகுதிக்கு 4 பறக்கும் படைகள் பணியில் இருக்க வேண்டும். 

*  50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள்.

*  40-50 வயதுக்குட்பட்டவர்களுக்கு மதியம் 1 மணி முதல் மதியம் 3 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள்.

*  40 வயதுக்குட்பட்டவர்களுக்கு மதியம் 3 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள்.

* ஒவ்வொருவருக்கும் டோக்கன் விநியோகம் செய்து மதுபாட்டில் வழங்க வேண்டும்.

 * 2 மணி நேரத்திற்கு ஒரு முறை பறக்கும் படையினர் ஆய்வு செய்ய வேண்டும். 

 * கூட்டத்தைப் பொறுத்து 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பாதுகாப்பு தர வேண்டும். 

 * கடைக்கு அரை கி.மீ.க்கு முன்பாகவே மதுப்பிரியர்களின் வாகனங்களை நிறுத்தி விட்டு வரிசைப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.