மாநில செய்திகள்

கொரோனாவிற்கு மருந்து உள்ளதாக தவறான தகவல் வெளியிட்டதாக தணிகாசலம் கைது + "||" + Thanikalasam arrested on false information corona

கொரோனாவிற்கு மருந்து உள்ளதாக தவறான தகவல் வெளியிட்டதாக தணிகாசலம் கைது

கொரோனாவிற்கு மருந்து உள்ளதாக தவறான தகவல் வெளியிட்டதாக தணிகாசலம் கைது
கொரோனாவிற்கு மருந்து உள்ளதாக தவறான தகவல் வெளியிட்டதாக தணிகாசலம் கைது
சென்னை,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் நாள்தோறும் தீவிரமடைந்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் குறித்து சமூக ஊடகங்களில் பொது சுகாதாரத் துறை இயக்குநர் அல்லது மருத்துவக் கல்வி இயக்குநர் அல்லது ஊரக மருத்துவம், சுகாதாரப் பணி கள் இயக்குநர் அல்லது மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அனுமதியின்றி தகவல் பரப்புதல் The Epidemic Diseases Act and Regu- lations பிரிவு 8-ன்படி தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக தணிகாசலம் என்பவர் சமூக வலைதளங்களில் தகவல் பரப்பி வருகிறார். பொது மக்கள் நலனுக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதத்தில் செயல்பட்டு வருவதால், போலி சித்த மருத்துவர் தணிகாசலம்  மீது உரிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க, இயக்குநர், இந்திய மருத்துவம், ஹோமி யோபதி துறை சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. 

இந்த புகாரின் பேரில் தணிகாசலத்திடம் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில், தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அரசுக்கு எதிராக தகவல் வெளியிட்டதாக தொற்றுநோய் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக குற்றப்பிரிவு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.