மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு பணிகள்; முதல் அமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.347.76 கோடி நன்கொடை + "||" + Corona prevention works; Donation of Rs.347.76 crore to CM Relief Fund

கொரோனா தடுப்பு பணிகள்; முதல் அமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.347.76 கோடி நன்கொடை

கொரோனா தடுப்பு பணிகள்; முதல் அமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.347.76 கோடி நன்கொடை
கொரோனா தடுப்பு பணிக்காக முதல் அமைச்சர் நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.347.76 கோடி நன்கொடை வந்துள்ளது.
சென்னை,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தீவிரமடைந்து வருகிறது.  அதனை தடுக்க பல்வேறு தீவிர நோய்தடுப்பு பணிகளையும், நிவாரண பணிகளையும் போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

கொரோனா பாதிப்பு பேரிடர் காலமாக அறிவிக்கப்பட்டிருப்பதால் முதல்-அமைச்சரின் நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்குமாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்திருந்தார். இதன்படி தொழிலதிபர்கள், அரசு, தனியார் ஊழியர்கள், நடிகர் நடிகைகள், பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் வரையில் பல்வேறு தரப்பினர் நிதி வழங்கி வருகிறார்கள்.

அந்த வகையில், கொரோனா தடுப்பு பணிக்காக முதல் அமைச்சர் நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.347.76 கோடி நன்கொடை வந்துள்ளது.  கடந்த 5 நாட்களில் ரூ.41.34 கோடி நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது.  இவற்றில் அதிகபட்சமாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ரூ.20 கோடி வழங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அளிக்கும் நன்கொடைக்கு வருமான வரி விலக்கு
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அளிக்கும் நன்கொடைக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
2. கொரோனா தடுப்பு பணிகள்; இந்தியாவுக்கு அமெரிக்க அரசு ரூ.22.5 கோடி கூடுதல் நிதியுதவி அறிவிப்பு
கொரோனா தடுப்பு பணிகளுக்காக இந்தியாவுக்கு அமெரிக்க அரசு ரூ.22.5 கோடி கூடுதலாக நிதியுதவி அறிவித்துள்ளது.
3. கொரோனா தடுப்பு பணிகள்; சிறப்பு குழுக்களுடன் முதல் அமைச்சர் ஆலோசனை
கொரோனா தடுப்பு பணிகளை ஒருங்கிணைக்க ஏற்படுத்தப்பட்ட சிறப்பு குழுக்களுடன் முதல் அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.
4. கொரோனா தடுப்பு பணிகள் குறித்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அதிகாரிகள் ஆய்வு
கொரோனா தடுப்பு பணிகள் குறித்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு கண்காணிப்பு குழு அதிகாரிகள் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
5. மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் - சிறப்பு அதிகாரிகள் அறிவுறுத்தல்
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பு பணிகளை அதிகாரிகள் தீவிரப்படுத்த வேண்டும் என்று சிறப்பு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.