மாநில செய்திகள்

அரியலூரில் 168 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி + "||" + 168 people affected by coronation

அரியலூரில் 168 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

அரியலூரில் 168 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
அரியலூரில் 168 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
அரியலூர்,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இதனை தடுக்கும் பணியில் அரசு தீவிரமுடன் செயல்பட்டு வருகிறது.  சென்னை கோயம்பேட்டில் இருந்து அரியலூருக்கு சரக்கு வாகனங்கள் மூலம் சென்ற தொழிலாளர்களுக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் 2 சிறுவர்கள் உள்பட 20 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கடந்த 2ந்தேதி முடிவானது.

இதனை தொடர்ந்து, அரியலூர் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.  இதனால் மருந்தகங்கள், பால் கடைகள் மட்டுமே இயங்கின.  இதனால் 8 பேருடன் ஆரஞ்சு மண்டலமாக இருந்த அரியலூர்,  சிவப்பு மண்டலமாக மாறியது.

அரியலூரில் இதுவரை 34 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது.  இந்த நிலையில், 168 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இவர்களில் பலர் சென்னை கோயம்பேட்டில் இருந்து அரியலூருக்கு சென்றவர்கள் என தெரிய வந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா வைரஸ் உங்கள் மனைவி போன்றது மந்திரி பேச்சு-பெண்கள் அமைப்புகள் கண்டனம்
கொரோனா வைரஸ் உங்கள் மனைவி போன்றது என இந்தோனேசிய மந்திரியின் பேச்சுக்கு பெண்கள் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
2. கொரோனா பாதிப்பு; சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை பெண் தலைமை செவிலியர் பலி
சென்னையில் பணி நீட்டிப்பு செய்யப்பட்ட ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை பெண் தலைமை செவிலியர் கொரோனா பாதிப்புக்கு பலியாகி உள்ளார்.
3. கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்துள்ள 5 மாநிலங்களுடன் மத்திய அரசு ஆலோசனை
கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்துள்ள 5 மாநிலங்களின் அதிகாரிகளுடன் மத்திய சுகாதார செயலாளர் ஆலோசனை நடத்தினார்.
4. கேரளாவில் இன்று 67-பேருக்கு கொரோனா தொற்று உறுதி- முதல்வர் பினராயி விஜயன்
கேரளாவில் இன்று மேலும் 47-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
5. நெல்லையில் உயரும் கொரோனா பாதிப்பு; 32 பேருக்கு உறுதி
நெல்லையில் 32 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.