தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீர்: எண்கவுண்டரில் ஹிஸ்புல் இயக்க தளபதி சுட்டுக்கொலை + "||" + Jammu and Kashmir: Hizbul Commander Riyaz Naikoo has been eliminated by security forces in an encounter.

ஜம்மு காஷ்மீர்: எண்கவுண்டரில் ஹிஸ்புல் இயக்க தளபதி சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீர்: எண்கவுண்டரில் ஹிஸ்புல் இயக்க தளபதி சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.
ஸ்ரீநகர், 

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திப்போரா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இந்தத் தகவலின் பேரில், பாதுகாப்பு படையினர் குறிப்பிட்ட இடத்தை சுற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். 

உடனே சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர்.  இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சண்டையில்,  பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான். சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதி ஹிஸ்புல் முஜாகிதின் இயக்கத்தை சேர்ந்த கமாண்டர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.  

தொடர்ந்து அப்பகுதியில் துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருவதாக தகவல்கள் கூறுகின்றன.  காஷ்மீரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மொபைல் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. ஜம்மு காஷ்மீர்: பயங்கரவாதிகள் தாக்குதலில் துணை ராணுவ வீரர்கள் 3 பேர் பலி
காஷ்மீரில் துணை ராணுவம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 3 வீரர்கள் உயிரிழந்தனர்.
2. ஜம்மு காஷ்மீர்; உதாம்பூரில் சந்தேக நபர்கள் நடமாட்டம் -பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை
ஜம்மு காஷ்மீரின் உதாம்பூர் பகுதியில் சந்தேக நபர்கள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
3. காஷ்மீரில் தாக்குதல் நடத்த தலிபான்களிடம் பயிற்சி பெறும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள்
காஷ்மீரில் தாக்குதல் நடத்த தலிபான்களிடம் பயிற்சி பெறும் 10 ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் சுட்டுக்கொலை
4. காஷீமீரில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் 2 புதிய பயங்கரவாத குழுக்களை உருவாக்கியது
ஜம்மு-காஷ்மீரில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய பாதுகாப்பு வீரர்கள் மீது பாகிஸ்தான் பெரும் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளது.
5. காஷ்மீரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை, ஊடுருவல் முயற்சி முறியடிப்பு
எல்லைக்கட்டுப்பாட்டு பகுதி வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.