தேசிய செய்திகள்

மே 17-க்கு பிறகு என்ன திட்டம் உள்ளது ; மத்திய அரசுக்கு சோனியா காந்தி கேள்வி + "||" + Congress questions govt's strategy on lockdown, asks what after May 17

மே 17-க்கு பிறகு என்ன திட்டம் உள்ளது ; மத்திய அரசுக்கு சோனியா காந்தி கேள்வி

மே 17-க்கு பிறகு என்ன திட்டம் உள்ளது ; மத்திய அரசுக்கு சோனியா காந்தி கேள்வி
மே.17 ஆம் தேதிக்கு பிறகு அரசு என்ன மாதிரியான நடவடிக்கைகளை பின்பற்ற போகிறது என்று சோனியா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுடெல்லி,

நாட்டில் காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களின் முதல் மந்திரிகளுடன்  காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி காணொலி மூலம் இன்று ஆலோசனை நடத்தினார். இதில் புதுச்சேரி முதல் மந்திரி  நாராயணசாமி, பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங், சத்தீஸ்கர்முதல்வர் பூபேஷ் பாகல், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஆகியோரும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், எம்.பி. ராகுல் காந்தி ஆகியோரும் பங்கேற்றனர்.

இந்தக்கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த ரன்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், “கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்தியஅரசு மூன்றாம் கட்ட ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. வரும் 17-ம் தேதி முடியும் இந்த  ஊரடங்கை எவ்வாறு தளர்த்த மத்தியஅரசு திட்டமிட்டுள்ளது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேள்வி எழுப்பினார். அதுமட்டுமல்லாமல், மே 17-ம் தேதிக்குப்பின் என்ன வகையான தி்ட்டங்களை செயல்படுத்தப்போகிறது மத்திய அரசு என்றும் சோனியா காந்தி கேள்வி எழுப்பினார்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில் “ சோனியா காந்தி  கூறுவதை போல  மே 17-ம் தேதிக்குப்பின்  ஊரடங்கை எவ்வாறு மத்திய அரசு தளர்த்தப்போகிறது, 17-ம் தேதிக்குப்பின் என்ன திட்டம் வைத்திருக்கிறது என்பதை அறிந்து கொள்வது அவசியம் அனைத்து மாநில முதல்வர்களும் இதுகுறித்து மத்திய அரசிடம் கேள்வி எழுப்பி,  ஊரடங்கை எவ்வாறு தளர்த்துவீர்கள், அதன்பின் திட்டம் என்ன என்பதை கேட்க வேண்டும்”என்றார்.

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பேசுகையில் “கொரோனாவில் இருந்து  முதியோர்கள், நீரழிவு நோயாளிகள்,இதய நோயாளிகளை காக்க என்ன வழிமுறைகளை மத்தியஅரசு வைத்துள்ளது” என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 42.4 சதவீதம் - மத்திய அரசு
இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 42.4 சதவீதமாக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2. புலம் பெயர் தொழிலாளர்கள் வீடு திரும்பும் விவகாரத்தில் அரசியல் செய்வதா? மாயாவதி கடும் விமர்சனம்
புலம் பெயர் தொழிலாளர்களை அவர்கள் சொந்த ஊருக்கும் திருப்பி அனுப்பி வைக்கும் விவகாரத்தில் அரசியல் செய்வதாக காங்கிரஸ், பாஜகவை மாயாவதி கடுமையாக சாடினார்.
3. அலுவலகங்களில் கொரோனா தொற்று இருந்தால் மூட வேண்டாம்: மத்திய அரசு
கொரோனா தொற்று இருந்தால் அலுவலகங்களை மூட வேண்டாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
4. மத்திய அரசின் 2-வது கட்ட சலுகைகள் - விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் கோடி கடன்; வீட்டுக்கடனுக்கு மானியம் நீட்டிப்பு
கொரோனா நோய் பரவலால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளில் இருந்து இந்தியாவை மீட்கும் வகையில் ரூ.20 லட்சம் கோடியில் சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என்று கடந்த 12-ந் தேதி பிரதமர் மோடி அறிவித்தார்.
5. நிரவ் மோடியை காப்பாற்ற காங்கிரஸ் தீவிர முயற்சி - பா.ஜனதா குற்றச்சாட்டு
கடன் மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடியை காப்பாற்ற காங்கிரஸ் கட்சி தன்னால் இயன்ற அளவுக்கு முயற்சிக்கிறது என்று பா.ஜனதா குற்றம் சாட்டியுள்ளது.