தேசிய செய்திகள்

ஆரோக்கிய சேது செயலி பாதுகாப்பானது- மத்திய அரசு + "||" + Aarogya Setu is safe and secure, says Ravi Shankar Prasad

ஆரோக்கிய சேது செயலி பாதுகாப்பானது- மத்திய அரசு

ஆரோக்கிய சேது செயலி பாதுகாப்பானது- மத்திய அரசு
ஆரோக்கிய சேது செயலி பாதுகாப்பானது என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
புதுடெல்லி,

கொரோனா வைரஸ் பரவலை கண்காணிக்க, ‘ஆரோக்கிய சேது’ செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று உடையவர்களுடன் நாம்தொடர்பில் இருந்தோமா என்ற விவரத்தை இந்த செயலி தெரிவிக்கும்.அதன் மூலம் முன்னெச்சரிக்கையாக இருக்கலாம். அரசு வெளியிட்டுள்ள ஆரோக்கிய சேது என்ற இந்த செயலியில், பாதுகாப்பு குறைபாடு இருப்பதாகவும் தனியுரிமை மீறப்படுவதாகவும் பரவலாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. 

இந்த நிலையில், ஆரோக்கிய சேது செயலி மிகவும் பாதுகாப்பானது என்று மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் விளக்கமளித்துள்ளார். பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில்  ரவிசங்கர் பிரசாத் கூறும் போது, “ ஆரோக்கிய சேது செயலி இந்தியாவால் உருவாக்கப்பட்ட தொழில்நுட்ப கண்டுபிடிப்பாகும். கொரோனாவுக்கு எதிரான போருக்கு உதவும் பொறுப்பு மிக்க  செயலியாக உள்ளது.  இது மிகவும் வலுவான பாதுகாப்பு கட்டமைப்பை கொண்டதாகும்.   தனிநபர்களின் தரவுகளை பாதுகாப்பதில் மிகவும் சிறந்து” என்றார். 

தொடர்புடைய செய்திகள்

1. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு
அம்பன் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடியை மத்திய அரசு விடுவித்தது.
2. ஊரடங்கால் 29- லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு தவிர்ப்பு- மத்திய அரசு
இந்தியாவில் சரியான நேரத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் 29- லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு தவிர்க்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
3. சிறப்பு ரெயில் சேவை : நாளை முதல் இயக்கப்படும் ரெயில்கள் பற்றிய விவரம்
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், முக்கிய நகரங்களுக்கு இடையே சிறப்பு ரெயில்களை இயக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
4. 10 கோடியை நெருங்கியது “ஆரோக்கிய சேது” செயலி தரவிறக்கம்!
ஆரோக்கிய சேது செயலி தரவிறக்கம் 10 கோடியை நெருங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
5. சிபிஎஸ்இ விடைத்தாள்கள் திருத்தும் பணி 50 நாட்களில் முடிக்கப்படும்: மத்திய அரசு
சிபிஎஸ்இ விடைத்தாள்கள் திருத்தும் பணி 50 நாட்களில் முடிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.