தேசிய செய்திகள்

ஆல்கஹாலை அடிப்படையாகக் கொண்ட சானிடைசர் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை + "||" + Export of alcohol based sanitizers has been prohibited by Directorate General of Foreign Trade, Ministry of Commerce & Industry

ஆல்கஹாலை அடிப்படையாகக் கொண்ட சானிடைசர் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை

ஆல்கஹாலை அடிப்படையாகக் கொண்ட சானிடைசர் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை
ஆல்கஹாலை அடிப்படையாகக் கொண்ட சானிடைசர் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
புதுடெல்லி,

கொரோனா நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு இன்னும் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாததால்,  சமூக இடைவெளியை பின்பற்றுவது அடிக்கடி கைகளை சோப் அல்லது சானிடைசர் கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றை கடைபிடிப்பதன் மூலமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்று சுகாதார வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர். 

இதனால்,  சானிடைசரின் தேவை தற்போது நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது.  இந்நிலையில், உள்நாட்டு தேவை அதிகரிப்பு காரணமாக கைகளை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் சானிடைசர் கிருமி நாசினியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடைவிதித்துள்ளது.