மாநில செய்திகள்

பேரிடர் காலம் என்பதால் ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும் - ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் + "||" + Because of the disaster period Neet exam Should be canceled Teachers Association Request

பேரிடர் காலம் என்பதால் ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும் - ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்

பேரிடர் காலம் என்பதால் ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும் - ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்
பேரிடர் காலம் என்பதால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சென்னை, 

தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் பி.கே.இளமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

உயிரா? படிப்பா? என்றால் உயிரே முக்கியம். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையமுடியும். ஆனால் ஒத்திவைக்கப்பட்டுள்ள ‘நீட்’ தேர்வு ஜூலை 26-ந்தேதி நடத்தப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் வெந்தப்புண்ணில் வேல் பாய்ச்சுவதாக அமைந்துள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் வயிற்றுப் பசியாற்றுவதற்கே திண்டாடும் நிலையில் நீட் தேர்வை எதிர்கொள்ள எப்படி ஆயத்தமாக முடியும்?

பேரிடர் காலம் என்பதால் நீட் தேர்வினை ரத்துசெய்து, பழைய முறையான பிளஸ்-2 வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையினை நடத்திட ஆவன செய்யவேண்டும்.

இல்லையேல் கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்தபிறகு மாநில அரசே ஒரு நுழைவுத்தேர்வு வைத்து தேர்வுசெய்து இடமளிக்கலாம். எனவே, மேலும் பெற்றோர், மாணவர்கள் பாதுகாப்பினை உறுதிசெய்யும் வகையில் நீட் தேர்வினை மறுபரிசீலனை செய்ய மத்திய அரசினை வலியுறுத்தும்படி, முதல்-அமைச்சரை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகிறேன்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.