தேசிய செய்திகள்

ஊரடங்கில் ரஷ்ய காதலியுடன் லாரியில் மறைந்து சென்ற இந்திய வாலிபர் + "||" + Russian woman, Indian boyfriend caught while entering Shimla by hiding in truck

ஊரடங்கில் ரஷ்ய காதலியுடன் லாரியில் மறைந்து சென்ற இந்திய வாலிபர்

ஊரடங்கில் ரஷ்ய காதலியுடன் லாரியில் மறைந்து சென்ற இந்திய வாலிபர்
ஊரடங்கின்போது திருமணம் செய்து கொள்ள ரஷ்ய காதலியுடன் லாரியில் மறைந்து சென்ற இந்திய வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
சிம்லா,

நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது.  இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.  இமாசல பிரதேசத்தின் குல்லு நகரின் நிர்மந்த் பகுதியை சேர்ந்த 20 வயது கொண்ட வாலிபர் ஒருவர் 30 வயதுடைய ரஷ்ய பெண்ணுடன் காதலில் இருந்து வந்துள்ளார்.

இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.  எனினும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், சோகி நகருக்கு செல்வதற்காக லாரி ஒன்றின் பின்புறம் மறைந்து கொண்டு பயணம் செய்துள்ளனர்.

ஆனால், வழியில் போலீசார் லாரியை சோதனையிட்டதில் அவர்கள் இருவரும் பிடிபட்டனர்.  நொய்டா நகரில் இருந்து வந்த அவர்களிடம், ஊரடங்கில் பயணம் செய்வதற்கான பாஸ் எதுவும் இல்லை.  நிர்மந்த் பகுதியை அடைந்த பின்னர் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த விவரம் பற்றியும் போலீசாரிடம் தெரிவித்தனர்.

இதன்பின்பு ஊரடங்கில் சட்டவிரோத முறையில் சென்றதற்காக அவர்கள் மீது போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்தனர்.  லாரி ஓட்டுனர்  மற்றும் கிளீனர் மீதும் எப்.ஐ.ஆர். பதிவானது.  இதனை தொடர்ந்து தள்ளி பகுதியிலுள்ள மையம் ஒன்றில் ரஷ்ய பெண்ணையும், சோகி பகுதியில் உள்ள மையத்தில் மற்ற 3 பேரையும் போலீசார் தனிமைப்படுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சேலத்தில் பரபரப்பு போதை ஊசி போட்ட சிறுவன் சாவு நண்பர்களிடம் போலீசார் விசாரணை
சேலத்தில் போதை ஊசி போட்ட சிறுவன் உயிரிழந்தான். இது தொடர்பாக அவனது நண்பர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
2. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணம் வைத்து சூதாடிய 39 பேர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணம் வைத்து சூதாடிய 39 பேரை போலீசார் கைது செய்தனர்.
3. தர்மபுரியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க இருசக்கர வாகன நிறுத்தங்கள் அமைப்பு போலீசார் தீவிர கண்காணிப்பு
தர்மபுரியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு இடங்களில் இருசக்கர வாகன நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் நேற்று போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
4. விழுப்புரம் அருகே பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட மாணவி சாவு கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை
விழுப்புரம் அருகே பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட மாணவி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து இவ்வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
5. விழுப்புரம் நகரில் ஊரடங்கை மீறி திறக்கப்பட்ட கடைகள் போலீசார் ரோந்து சென்று மூடினர்
விழுப்புரம் நகரில் ஊரடங்கை மீறி திறக்கப்பட்ட கடைகளை போலீசார் ரோந்து சென்று மூட நடவடிக்கை எடுத்தனர்.