உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் 80 சதவீதம் பேருக்கு கொரோனா தொற்று இருக்கலாம்?- தகவல் + "||" + Afghanistan Could Have One Of Highest Coronavirus Infection Rates In World: Global Body

ஆப்கானிஸ்தானில் 80 சதவீதம் பேருக்கு கொரோனா தொற்று இருக்கலாம்?- தகவல்

ஆப்கானிஸ்தானில் 80 சதவீதம் பேருக்கு கொரோனா தொற்று இருக்கலாம்?- தகவல்
ஆப்கானிஸ்தானில் 80 சதவீதம் பேருக்கு கொரோனா தொற்று இருக்கலாம்? என குடிபெயர்வுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்து உள்ளது.
காபூல்

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில், 3,392 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது; 104 பேர் பலியாகி உள்ளனர். தலைநகர் காபூலில், 500 பேரிடம் செய்யப்பட்ட மாதிரி சோதனையில், 50 சதவீதம் பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதன் மூலம், ஆப்கானிஸ்தானில் 50 கோடி மக்கள் தொகையில், 80 சதவீதம் பேருக்கு தொற்று இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

குடிபெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் ஆப்கானிஸ்தான் அதிகாரி நிக்கோலஸ் பிஷப் கூறியதாவது:-

ஜனவரி முதல் ஈரான் மற்றும் பாகிஸ்தானிலிருந்து திரும்பி வந்த கிட்டத்தட்ட 2,71,000 மக்களுக்கு அடிப்படைவசதி வழங்க ஆப்கானிதான் தற்போது போராடி வருகிறது. ஆப்கானிய சமுதாயத்தின் சமூக-பொருளாதார நிலை காரணமாக, குடும்பங்கள் ஈரான் மற்றும் பிற அண்டை நாடுகளுக்கு  வேலைக்கு செல்லாமல் தொடர்ந்து வாழ முடியாது. இதற்கிடையில், தலிபான் மற்றும் அமெரிக்காவின் தாக்குதல்கள் அதிகரித்ததன் காரணமாக ஒரு பகுதியில் மோதல்கள் விரிவடைவது நிலைமையை மோசமாக்கியுள்ளது.

அங்கு, உள்நாட்டுப் போர் நிலவரம் காரணமாக, நாட்டின் 30 சதவீதத்திற்கும் அதிகமான பகுதிகளில், பரிசோதனை நடத்த முடியாத நிலை உள்ளது. ஆப்கானிஸ்தானில், எட்டு பரிசோதனை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு ஒரு நாளில், 100 முதல், 150 பரிசோதனைகள் மட்டுமே செய்யப்படுகின்றன. பயிற்சி பெற்ற மருத்துவர்கள் இல்லாததால், அங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய வசதிகள் இல்லை.

நாட்டில்  தனிமனித ஆயுட்காலம் 50 ஆண்டுகள் மட்டுமே, பெரும்பான்மையான மக்கள் காசநோய், எச்.ஐ.வி எய்ட்ஸ், புற்றுநோய் போன்ற நிலைமைகளுடன் பிறந்திருக்கிறார்கள், கூடுதலாக, சுற்றுச்சூழல் மாசுபாடு ஆபத்து உள்ளது.

தனிமனித இடைவெளியை பின்பற்றுவது, தனிமைப்படுத்திக் கொள்வது போன்ற நடைமுறைகள் அங்கு சாத்தியப்படுவதில்லை. அங்கு ஒரு குடும்பத்தில் சராசரியாக ஏழு பேர் இருக்கின்றனர். அவர்கள், சிறிய அறைகளில் வசிக்கின்றனர். சில தினங்களுக்கு மேல், அவர்களால் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்க முடிவதில்லை. அவர்களின் சமூக பொருளாதார நிலை, அதற்கு இடமளிப்பதில்லை. இதன் காரணமாக, உலக அளவில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, அதிகம் உள்ள நாடாக ஆப்கானிஸ்தான் இருக்க வாய்ப்புள்ளது என அவர் கூறினார்.

இந்த நிலையில் தலிபான்கள் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பை தங்கள் பிரசாரத்திற்கு பயன்படுத்தி கொள்கின்றனர்,  வீட்டுக்கு வீடு வெப்பநிலை சோதனை கருவிகளையும் கைசுத்திகரிக்கும் கிருமி நாசினிகளையும் விநியோகிலும் த்து வருகிறார்கள். மேலும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை கூட நிறுவியதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. இத்தாலியில் கொரோனாவுக்கு எதிரான ஊரடங்கு உத்தரவை எதிர்த்து மக்கள் போராட்டம்
இத்தாலியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
2. கொரோனா தொற்று பாதிப்பு:இந்தியாவில் குழந்தைகள் கடத்தல் அதிகரிப்பு
கொரோனா தொற்றுநோய் இந்தியாவில் குழந்தைகள் கடத்தல் என்ற இரண்டாவது நெருக்கடியை உருவாக்கியுள்ளது.
3. கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தப்போவதில்லை டிரம்பின் உதவியாளர்களின் தலைவர் ஆணவ பேச்சு
கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தப்போவதில்லை, இது சாதாரண காய்ச்சல்போல் தான் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் உதவியாளர்களின் தலைவரான மார்க் மெடோஸ் கூறி உள்ளார்.
4. கொரோனா பாதிப்பு: அமெரிக்காவில் பிப்ரிவரி இறுதிக்குள் 5 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும்: ஆய்வு தகவல்
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் எதிர்வரும் பிப்ரிவரி இறுதிக்குள் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என்று ஆய்வு அறிக்கை ஒன்று சுட்டிக்காட்டுகிறது.
5. கொரோனா பாதிப்பு: கடந்த 8 மாதங்களில் அக்டோபரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடியை தாண்டும்...!
கொரோனா பாதிப்பு காலத்தில் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் கடந்த 8 மாதங்களில் முதல் முறையாக அக்டோபரில் ரூ .1 லட்சம் கோடியை தாண்டக்கூடும் என தகவ்ல் வெளியாகி உள்ளது.