தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்புக்கு மராட்டியத்தில் பலி எண்ணிக்கை 651 ஆக உயர்வு + "||" + Coronavirus death toll rises to 651

கொரோனா பாதிப்புக்கு மராட்டியத்தில் பலி எண்ணிக்கை 651 ஆக உயர்வு

கொரோனா பாதிப்புக்கு மராட்டியத்தில் பலி எண்ணிக்கை 651 ஆக உயர்வு
கொரோனா பாதிப்புக்கு மராட்டியத்தில் பலி எண்ணிக்கை 651 ஆக உயர்வடைந்து உள்ளது.
புனே,

இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிர பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது.  நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.  எனினும், பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.  பொதுமக்கள் தங்களை காத்து கொள்ள ஊரடங்கு விதிகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

நாட்டில் அதிக அளவாக மராட்டியத்தில் 16,758 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  கடந்த 24 மணிநேரத்தில் 34 பேர் பலியான நிலையில், பலி எண்ணிக்கை 617ல் இருந்து 651 ஆக உயர்ந்து உள்ளது.  3 ஆயிரத்து 94 பேர் பாதிப்பில் இருந்து விடுபட்ட நிலையில் வீடு திரும்பி உள்ளனர்.

கோவாவில் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 7 பேரும் சிகிச்சை முடிந்து சென்றுள்ளனர்.  இதனால் கொரோனாவில் இருந்து முழு அளவில் விடுபட்ட நிலையை கோவா அடைந்துள்ளது.  இதனை தொடர்ந்து மணிப்பூர் மற்றும் அருணாசல பிரதேசம் ஆகியவையும் கொரோனா பாதிப்பில் இருந்து முழுவதும் விடுபட்டு உள்ளன.  தமிழகத்தில் 4,829 பேர் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.  1,516 பேர் சிகிச்சை முடிந்து திரும்பி சென்றுள்ளனர்.  இதுவரை 35 பேர் பலியாகி உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சாதாரணமாக ஏற்படும் இருமலும், தும்மலும் கொரோனா பாதிப்பு அல்ல-டாக்டர்கள்
சாதாரணமாக ஏற்படும் அனைத்து இருமல், தும்மலும் கொரோனா அல்ல என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
2. ‘கொரோனா பாதிப்புக்கு மாற்று வீரர்’ - ஐ.சி.சி.யிடம் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கோரிக்கை
கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு மாற்று வீரர் வேண்டும் என்று ஐ.சி.சி.யிடம் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது.
3. தமிழகம் முழுவதும் சிறைகளில் உள்ள 39 கைதிகளுக்கு கொரோனா பாதிப்பு
தமிழகம் முழுவதும் உள்ள மத்திய சிறைகளில் 39 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. கொரோனா வைரஸ் உங்கள் மனைவி போன்றது மந்திரி பேச்சு-பெண்கள் அமைப்புகள் கண்டனம்
கொரோனா வைரஸ் உங்கள் மனைவி போன்றது என இந்தோனேசிய மந்திரியின் பேச்சுக்கு பெண்கள் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
5. இந்தியாவில் கொரோனா பாதிப்பு; கடந்த 24 மணிநேரத்தில் 194 பேர் பலி
இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு கடந்த 24 மணிநேரத்தில் 194 பேர் பலியாகி உள்ளனர்.