உலக செய்திகள்

ரஷ்யாவில் கோர தாண்டவமாடும் கொரோனா - ஒரே நாளில் 11 ஆயிரம் பேருக்கு மேல் பாதிப்பு + "||" + Russia Sees Record Rise in Coronavirus Cases with More Than 11,000 New Infections

ரஷ்யாவில் கோர தாண்டவமாடும் கொரோனா - ஒரே நாளில் 11 ஆயிரம் பேருக்கு மேல் பாதிப்பு

ரஷ்யாவில்  கோர தாண்டவமாடும் கொரோனா - ஒரே நாளில்  11 ஆயிரம் பேருக்கு மேல் பாதிப்பு
ரஷ்யாவில் ஒரே நாளில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாஸ்கோ,

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது சுமார்  38 லட்சமாக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா நோய் தொற்றுக்கு இதுவரை 2 லட்சத்து 65 ஆயிரம்  பேர் பலியாகி உள்ளனர். உலக நாடுகளை உலுக்கி கொண்டு வரும் கொரோனா வைரஸ் ரஷ்யாவிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.  

அந்த நாட்டில் தொடர்ந்து  5  நாட்களாக  தினமும் சராசரியாக 10 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.ரஷ்யாவில்  ஒரே நாளில் 11 ஆயிரம் பேருக்கு  மேல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  ரஷ்யாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை  1,77,160- ஆக உள்ளது.  உலக அளவில்  கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் தற்போது ரஷ்யா 5 -வது இடத்தில் உள்ளது. 

பிற ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும் போது ரஷ்யாவில் இறப்பு விகிதம் மிகவும் குறைவாகவே உள்ளது. ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 88 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். ரஷ்யாவில் இதுவரை  1,625 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. வீரருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் பார்முலா1 கார் பந்தயம் ரத்து செய்யப்படுமா? - தலைவர் கருத்து
வீரருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் பார்முலா1 கார் பந்தயம் ரத்து செய்யப்படுமா என்பது குறித்து அதன் தலைவர் கருத்து தெரிவித்துள்ளார்.
2. சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு 36 ஆயிரத்தை தாண்டியது
சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு தற்போது 36 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
3. ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,32,277 ஆக உயர்வு
ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 4,32,277 ஆக உயர்ந்துள்ளது.
4. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கியது: பலி எண்ணிக்கை 5,598 ஆக உயர்வு
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கிவிட்டது. இதில் மராட்டியத்தில் மட்டும் 70 ஆயிரம் பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் இந்த வைரசுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 5,598 ஆக உயர்ந்துள்ளது.
5. புதிதாக 2,361 பேருக்கு தொற்று உறுதி மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு 70 ஆயிரத்தை தாண்டியது
மராட்டியத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 70 ஆயிரத்தை தாண்டியது. நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 361 பேருக்கு தொற்று உறுதியானது.