தேசிய செய்திகள்

சென்னை உள்பட 8 நகரங்களில் மட்டும் 56.5 சதவீதம் கொரோனா பாதிப்பு + "||" + Coronavirus Over 56% cases from eight cities, 20% from Mumbai alone

சென்னை உள்பட 8 நகரங்களில் மட்டும் 56.5 சதவீதம் கொரோனா பாதிப்பு

சென்னை உள்பட 8 நகரங்களில் மட்டும் 56.5 சதவீதம் கொரோனா பாதிப்பு
இந்தியாவில் உள்ள மொத்த கொரோனா பாதிப்புகளில் சென்னை மற்றும் 8 நகரங்களில் மட்டும் 58 சதவீதம் கொரோனா பாதிப்பு
புதுடெல்லி

இந்தியாவில்  கொரோனா பாதிப்பு காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை 1783 ஐ எட்டியுள்ளது, நாட்டில் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 50,000 ஐ தாண்டியுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த 24 மணி நேரத்தில் 3561 புதிய பாதிப்புகள் மற்றும் 89 இறப்புகள் பதிவாகியுள்ளன.

இந்தியாவில் செயலில் உள்ள கொரோனா பாதிப்புகளின்  எண்ணிக்கை 35,902 ஆக உள்ளது, அதே நேரத்தில் 15,266 பேர் குணமாகி  வீடு திரும்பி உள்ளனர்.

மராட்டிய மாநிலத்தில்  617 இறப்பு மற்றும் 16,758 பாதிப்புகளுடன்  மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலத்தில் முதல் இடத்தில் உள்ளது. மாநிலத்தில் 3094 பேர் குணப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று மத்திய அரசு அளித்த தகவல்கள் தெரிவிக்கின்றன. மும்பையில் மட்டும் 412 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிப்புகள் 10,714 ஆக உயர்ந்துள்ளன.

பாதிப்புகளின் எண்ணிக்கை மற்றும் இறப்பு இரண்டின் அடிப்படையில் குஜராத் மராட்டிய மாநிலத்திற்கு அடுத்து உள்ளது. மாநில சுகாதார அமைச்சகம் அளித்த தகவலின் படி , 6,625 பேர் வைரஸ் பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, 396 பேர் இந்த நோயால் மரணமடைந்து உள்ளனர்

டெல்லியில்  65 இறப்புகளுடன் 5,532 கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

ஆந்திராவில் 56 புதிய பாதிப்புகளுடன்  மொத்தம் 1,833 ஆக உள்ளன. 38 இறப்புகள் பதிவாகி உள்ளது.

இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்புகளில்  56.5 சதவீதம் கீழ் கண்ட 8 நகரங்களில்பதிவாகி உள்ளது.

மும்பை: 20%
டெல்லி: 11%
அகமதாபாத்: 9%
புனே: 4%
சென்னை: 4%
இந்தூர்: 3%
தானே: 3% (தோராயமாக)
ஜெய்ப்பூர்: 2.5%


தொடர்புடைய செய்திகள்

1. புலம்பெயர்ந்தோரின்வேதனை: ரெயில் நிலையத்தில் தாயார் இறந்தது தெரியாமல் எழுப்ப முயன்ற குழந்தை
முடிவில்லாத புலம்பெயர்ந்த நெருக்கடியில் பீகார் நிலையத்தில் இறந்த தாயை குழந்தை ஒன்று எழுப்ப முயற்சிக்கிறது
2. கொரோனா வைரஸ்: பிரேசில் இந்த வாரத்தில் நான்காவது முறையாக 1,000 இறப்புகளைப் பதிவு செய்தது
கொரோனா வைரஸ்: பிரேசில் இந்த வாரத்தில் நான்காவது முறையாக 1,000 இறப்புகளைப் பதிவு செய்து உள்ளது. அங்கு மொத்தம் இறப்பு எண்ணிக்கை 24,512 ஆக உள்ளது.
3. தொடரும் வேதனை: சென்னையில் மேலும் ஒரு கொரோனா நோயாளி தற்கொலை
சென்னையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு கொரோனா நோயாளி தற்கொலை செய்து கொண்டார்.
4. தினமும் 1.1 லட்சம் மாதிரிகள் பரிசோதனை- இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்
தினமும் 1.1 லட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்படுவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
5. கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரிப்பு; கேரள செயல்பாடுகள் தோல்வியடைகிறதா?
கேரள செயல்பாடுகள் தோல்வியடைகிறதா? புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் சுகாதார ஊழியர்களிடையே பரவுவது அதிகாரிகளை கவலையடையச் செய்கிறது.