மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று டாஸ்மாக் வசூல் ரூ.140 கோடி முதல் ரூ.160 கோடி எனத்தகவல் + "||" + Tamil Nadu today, the tasmac collecting Rs 140 crore to Rs 160 crore

தமிழகத்தில் இன்று டாஸ்மாக் வசூல் ரூ.140 கோடி முதல் ரூ.160 கோடி எனத்தகவல்

தமிழகத்தில்  இன்று டாஸ்மாக் வசூல் ரூ.140 கோடி முதல் ரூ.160 கோடி எனத்தகவல்
தமிழகத்தில் இன்று டாஸ்மாக் வசூல் ரூ.140 கோடி முதல் ரூ.160 கோடியை தொட்டுள்ளதாக டாஸ்மாக் வட்டாரங்கள் கூறுகின்றன.
சென்னை,

கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது கடைகள் ஒவ்வொன்றாக திறக்க அரசு அனுமதி வழங்கி வருகிறது. அரசு நடத்தி வரும் டாஸ்மாக் மதுபானக்கடைகள் இன்று (வியாழக்கிழமை) முதல் சென்னை நீங்கலாக தமிழகம் முழுவதும் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

இதன்படி, ஏறத்தாழ 40 நாட்களுக்கு பிறகு இன்று சென்னையை தவிர தமிழகம் முழுவதும் இன்று காலை 10 மணிக்கு மதுக்கடைகள் திறக்கப்பட்டன. மாலை 5 மணி வரை மதுக்கடைகள் செயல்பட்டன.  இந்த நிலையில், இன்று ஒருநாளில் மட்டும் ரூ.140 கோடி முதல் ரூ.160 கோடி வரை மது விற்பனை நடைபெற்று இருக்கலாம் என்று டாஸ்மாக் வட்டாரங்கள் கூறுகின்றன. வழக்கமான நாட்களில் நாளொன்றுக்கு ரூ.80 கோடி வரை விற்பனையாகும் நிலையில் இன்று மிக அதிக வசூல் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. 


தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதால் பிரேசிலில் இருந்து அமெரிக்கா வர தடை
கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதால் பிரேசிலில் இருந்து அமெரிக்கா வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
3. டெல்லியில் புதிதாக 635 பேருக்கு கொரோனா தொற்று
டெல்லியில் புதிதாக 635 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. பாகிஸ்தான் விமான விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 97 ஆக அதிகரிப்பு
பாகிஸ்தான் விமான விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்துள்ளது.
5. ஜூன் 1 முதல் இயக்கப்பட உள்ள ரெயில்களுக்கான அட்டவணை வெளியீடு - தமிழகத்திற்கு ரெயில்கள் இல்லை
ஜூன் 1 முதல் இயக்கப்பட உள்ள ரெயில்களுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.