தேசிய செய்திகள்

மராட்டியத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 1,362 பேருக்கு கொரோனா தொற்று + "||" + 1,362 #COVID19 cases reported in Maharashtra today, the total number of cases in the state is now at 18,120: State Health Minister Rajesh Tope

மராட்டியத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 1,362 பேருக்கு கொரோனா தொற்று

மராட்டியத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று  ஒரே நாளில் 1,362 பேருக்கு கொரோனா தொற்று
மராட்டியத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 1362 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை,

நாட்டிலேயே மராட்டியம் தான் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ளது. ஒவ்வொரு நாளும் 500-க்கும் மேற்பட்டோர் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி வந்தனர். இந்தநிலையில் கடந்த 1-ந் தேதி மட்டும் 1,008 பேர் தொற்றுக்கு பாதிக்கப்பட்டு இருந்தனர். அன்றைய தினம் தான் மராட்டியத்தில் அதிகப்பட்ச பாதிப்பாக இருந்தது.

இந்தநிலையில் அதை முறியடிக்கும் வகையில் நேற்று ஒரே நாளில் 1,233 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த நிலையில், இன்று புதிய உச்சமாக ஒரே நாளில் 1362 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,120 ஆக உள்ளது. 

மும்பை தாராவி பகுதியில் இன்று மட்டும் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தாராவி பகுதியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை  783 ஆக உயர்ந்துள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. மும்பையில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 1,000-ஐ தாண்டியது
மும்பையில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 1000-ஐ தாண்டி உள்ளது.
2. ஜூன் 6-க்கு பிறகு நடு இருக்கைகளை காலியாக வைக்க வேண்டும் -ஏர் இந்தியாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
சர்வதேச சிறப்பு விமானங்களில் ஜூன் 6-க்கு பிறகு நடு இருக்கைகளை காலியாக வைத்து இயக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
3. கேரளா மாநிலத்தில் ஒரே நாளில் 49 பேருக்கு கொரோனா
கேரளா மாநிலத்தில் ஒரே நாளில் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. நேபாளத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 675- ஆக உயர்வு
நேபாளத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. உலக அளவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,45,068 ஆக உயர்வு
உலக அளவில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 3,45,068 ஆக உயர்ந்துள்ளது.