மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது - சென்னையில் 2 பெண்கள் பலி + "||" + In TamilNadu Corona vulnerability count Exceeded 5 thousand 2 women killed in Chennai

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது - சென்னையில் 2 பெண்கள் பலி

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது - சென்னையில் 2 பெண்கள் பலி
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது. நேற்று 22 மாவட்டங்களில் புதிதாக பலருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
சென்னை, 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தற்போது கோயம்பேடு மார்க்கெட் வழியாக விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இந்த நிலையில் நாளுக்கு நாள் புதிதாக பாதிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பொதுமக்கள் இடையே பெரிதும் கவலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது பெரும்பாலும் பாதிக்கப்படுகிறவர்கள் கோயம்பேடு மார்க்கெட்டுடன் தொடர்பில் இருப்பவர்கள் தான்.

இதனால் பெரும்பாலான காய்கறி வணிகர்களுக்கு பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று 22 மாவட்டங்களில், கொரோனா நோய் தொற்றால் 580 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சென்னையில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று கொரோனா பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 410 ஆண்களும், 170 பெண்கள் என 580 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 409 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று 31 பேர் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 1,547 பேர் மருத்துவமனைகளில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர்.

திருவள்ளூரை சேர்ந்த 56 வயது பெண் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு, கடந்த 1-ந்தேதி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

இதைப்போல் சென்னையைச் சேர்ந்த 48 வயது பெண் கடந்த 3-ந்தேதி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தமிழகத்தில் நேற்று பாதிக்கப்பட்ட 580 பேரில், சென்னையில் 1 வயது ஆண் குழந்தை உட்பட 15 குழந்தைகள் மற்றும் 301 பேரும், திருவள்ளூரில் 2½ வயது ஆண் குழந்தை உட்பட 63 பெரும், விழுப்புரத்தில் 12 வயது ஆண் குழந்தை உட்பட 45 பேரும், பெரம்பலூரில் 33 பேரும், கடலூரில் 32 பேரும், அரியலூரில் 24 பேரும், திருவண்ணாமலையில் 17 பேரும், செங்கல்பட்டில் 13 பேரும், ராணிப்பேட்டையில் 7 பேரும், திருச்சியில் 5 பேரும், கிருஷ்ணகிரியில் 4 பேரும், தேனி மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களில் தலா 3 பேரும், தஞ்சாவூர், திருப்பத்தூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, கரூர் மற்றும் காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேரும், கள்ளக்குறிச்சி, தூத்துக்குடி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் நேற்று ஒரே நாளில் 15 குழந்தைகள், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் என 12 வயதுக்கு உட்பட்ட 18 குழந்தைகள் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நேற்று பாதிக்கப்பட்டவர்களில் யாருக்கும் முதன்மை கொரோனா தொற்று இல்லை.

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 14 ஆயிரத்து 195 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகம் உள்பட 5 மாநிலங்களிலிருந்து வரும் அனைத்துப் போக்குவரத்துக்கும் தடை - கர்நாடக அரசு அறிவிப்பு
தமிழகம் உள்பட 5 மாநிலங்களிலிருந்து வரும் அனைத்துப் போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்படுவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
2. தமிழகத்தில் ரூ.15 ஆயிரம் கோடி முதலீடு - எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், 17 நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம்
தமிழகத்தில் 17 வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தானது. இதன் மூலம் 47 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.
3. தமிழகத்தில் 4 லட்சத்து 23 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை - பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,545 ஆக உயர்வு
தமிழகத்தில் 4 லட்சத்து 23 ஆயிரத்து 18 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 18 ஆயிரத்து 545 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. தமிழகத்தில் ஒரே நாளில் 805 பேருக்கு தொற்று: 88 சதவீதம் பேருக்கு அறிகுறியே இல்லாமல் கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் 88 சதவீதம் பேருக்கு அறிகுறியே இல்லை எனவும் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
5. தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்
சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 10,576 ஆக உயர்ந்துள்ளது.