உலக செய்திகள்

ஆப்பிரிக்காவில் கொரோனாவுக்கு 1,90,000 பேர் பலியாக கூடும்; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை + "||" + World Health Organization warns Corona in Africa may kill 1,90,000

ஆப்பிரிக்காவில் கொரோனாவுக்கு 1,90,000 பேர் பலியாக கூடும்; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

ஆப்பிரிக்காவில் கொரோனாவுக்கு 1,90,000 பேர் பலியாக கூடும்; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
ஆப்பிரிக்காவில் போதிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிடில் 1 லட்சத்து 90 ஆயிரம் பேர் வரை பலியாவார்கள் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
வாஷிங்டன்,

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.  உலக அளவில் இதுவரை 38 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  2 லட்சத்து 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர்.  இவற்றில் அமெரிக்காவில் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர்.  12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கொரோனா பாதிப்பு பற்றி உலக சுகாதார அமைப்பின் ஆப்பிரிக்கா பிரிவு 47 நாடுகளில் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை ஒன்றை ஊடகங்களுக்கு வெளியிட்டு உள்ளது.  இதுபற்றி அந்த அமைப்பின் ஆப்பிரிக்காவுக்கான மண்டல இயக்குனர் மத்ஷிதிசோ மொயத்தி அறிக்கையில் தெரிவித்துள்ள செய்தியில், கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் போதிய அளவு மேற்கொள்ளவில்லை எனில், நோய் தொற்று ஏற்பட்ட முதல் ஆண்டில் ஆப்பிரிக்காவில் பலி எண்ணிக்கை 83 ஆயிரம் முதல் 1 லட்சத்து 90 ஆயிரம் வரை செல்ல கூடும்.

இதுவே பாதிப்பு எண்ணிக்கையானது 2.9 முதல் 4.4 கோடி வரை செல்ல கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.  ஆப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஆனது, உலகம் முழுவதும் உள்ளது போன்று மடங்காக பெருகாவிட்டாலும், ஹாட்ஸ்பாட் பகுதிகளில் மெல்ல பரவும் என்றும் அறிக்கையில் அவர் தெரிவித்து உள்ளார்.

ஆப்பிரிக்காவில் அடுத்த பல ஆண்டுகளுக்கு அன்றாட வாழ்வில் ஒரு பிரச்னையாக கொரோனா பாதிப்பு மாற கூடும்.  அதனால் பல நாட்டு அரசுகளும் சரியான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும்.  நாம் கொரோனா பாதிப்பு பற்றி சோதனை செய்து, கண்டறிந்து, தனிமைப்படுத்தி பின்னர் சிகிச்சை அளிக்க வேண்டிய தேவை உள்ளது என்றும் தெரிவித்து உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆன்லைனில் வகுப்பு எடுக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை; அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை
ஆன்லைனில் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
2. ஊரடங்கில் பறிமுதல் செய்து நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு வாடகை வசூலித்தால் கடும் நடவடிக்கை ஒப்பந்ததாரர்களுக்கு, போலீசார் எச்சரிக்கை
ஊரடங்கில் பறிமுதல் செய்து நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு உரிமையாளர்களிடம் வாடகை வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒப்பந்ததாரர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
3. ஊரடங்கிற்கு மத்தியில் நடந்த திருமண நிச்சயதார்த்தம் லாரியில் சென்றவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை
மந்தாரக்குப்பம் அருகே ஊரடங்கிற்கு மத்தியில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதன் பின்னர் லாரியில் சென்றவர்களை போலீசார் பிடித்து எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.
4. அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை
தங்கள் நாட்டின் மீதான பொருளாதார தடைகள் அனைத்தையும் அமெரிக்கா திரும்ப பெற வேண்டுமென வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
5. வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் வீட்டை விட்டு வெளியே வர கூடாது ஆணையர் எச்சரிக்கை
வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் வீட்டை விட்டு வெளியே வர கூடாது என கூத்தாநல்லூர் ஆணையர் லதா எச்சரித்தார்.